மழை நீருடன் கழிவு நீர் கலப்பு ராமலிங்கம் நகர் மக்கள் பாதிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட, இந்திரா காந்தி சாலை - ராமலிங்கம் நகரில், மழை நீருடன் கழிவு நீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் நகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா காந்தி சாலை அருகில், ராமலிங்கம் நகர் உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்திரா காந்தி சாலையையும், பெரியார்

திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட, இந்திரா காந்தி சாலை - ராமலிங்கம் நகரில், மழை நீருடன் கழிவு நீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா காந்தி சாலை அருகில், ராமலிங்கம் நகர் உள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்திரா காந்தி சாலையையும், பெரியார் சாலையையும் இணைக்கும் வகையில், ராமலிங்கம் நகர் உள்ளது. இந்நகரில் உள்ள காலியிடத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழை, தேங்கி குளமாக மாறி விட்டது.இந்த நிலையில், பாதாள சாக்கடையில் இருந்து, கழிவு நீர் வெளியேறி, மழை நீருடன் கலந்து விட்டது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதால்,

இப்பகுதியைச் சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.மேலும், கொசு உற்பத்தியாக, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை வழியை சீரமைத்து, கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்காமல் இருக்க, வழிவகை செய்ய வேண்டும் என, இப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X