'சப்பைக்கட்டு கட்டுவது சிறந்த பண்பு அல்ல.. சூர்யா கண்டிக்கத்தக்கவரே'

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (104)
Advertisement
சென்னை : சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்திற்கு எதிராக வன்னியர்கள் போர்க்கொடி துாக்கிய நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.இதற்கு, 'எம்10' தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் வெளியிட்ட அறிக்கை: படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும்,
Jai Bhim, Suriya, Jai Bhim controversy, Actor Suriya

சென்னை : சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்திற்கு எதிராக வன்னியர்கள் போர்க்கொடி துாக்கிய நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு, 'எம்10' தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் வெளியிட்ட அறிக்கை: படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை சீர்குலைக்காமல் வைப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை, 'வேதம் புதிது' படம் எடுத்தவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.


latest tamil news


ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து, படம் எடுத்ததை கண்டித்து, அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல், சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தால் கண்டிக்க வேண்டியவரே.

சுதந்திரம் என்ற பெயரில், ரோட்டில் நிர்வாணமாக நடப்பது, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அதுபோன்ற அசிங்கம் தான், சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். ஆகச்சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும், புனைவு பெயர்களும் எதற்காக? 'குறியீடுகளை நீக்கி விட்டோம்' என சப்பைக்கட்டு கட்டுவது, சிறந்த கலைஞரின் சிறந்த பண்பு அல்ல. இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
22-நவ-202106:28:35 IST Report Abuse
N Annamalai மொத்தத்தில் படம் சிறப்பாக ஓட்டுவது என்று எல்லோரும் முடிவு செய்து இப்படி எதிர்மறை விளம்பரம் செய்கிறார்கள் என்று நினைக்கிறன் .ஒருத்தர் உடல் நலம் சரில்லை என்று செய்திகளிலோ வருவார் .அதற்கு அடுத்த நாள் படம் வரும் .மக்கள் காசு கொடுத்து பார்த்து விட்டு மனதை சரி செய்து கொள்வார்கள் .கேரளாவை பாருங்கள் நல்ல படம் மட்டும் தான் ஓடும் .அதன் முதன்மை நடிகர் யாராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் .
Rate this:
sankar - Nellai,இந்தியா
23-நவ-202118:21:42 IST Report Abuse
sankarஜாதியை வைத்து காசு பார்ப்பவன் எல்லாம் மனிதனா...
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
24-நவ-202102:01:49 IST Report Abuse
vadiveluஇதை ஈரோட்டு ராமசாமி செய்த போதே கண்டித்து இருக்க வேண்டும். இன்று அவர் இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டி. இவர்களும் பெருந்தலைவர்களாக முயற்சிக்கிறார்கள்....
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
20-நவ-202118:02:32 IST Report Abuse
Ravi “ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்”. So Surya is very successful in his mission as koothadi, but we Tamils lost unity சமூக நீதி காவலன் சூர்யா, பார்வதியின் (செங்கனி) உரிமை வாங்காமல் கதையை திருடி பலகோடி சம்பத்திருக்கிறான். படத்தின் லாபத்தையும் அவன் செய்த திருட்டுதனத்துகாகவும், தமிழகத்தில் சாதி உணர்வை தூண்டி கொந்தளிப்பை ஏற்படுத்திய சூர்யா குழுவிடமும், சட்டம் தெரிந்த நீதிபதி சந்துரு துணை போனதற்கும் அபராதமாக 1000 கோடி பெற்று ஆதிவாசிகள், குறவர்கள், இருளர்கள் மற்றும் நாடோடிகளுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய கல்விக்கும் உதவலாம். அப்பன் படிப்பது ராமாயணம் மகன் இடிப்பது பெருமாள் கோயில் Biopic படம் எடுப்பதற்கு முன்பே சச்சின் டெண்டுல்கர், தோனி, பூலான் தேவிக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. Real Heroine பார்வதி Human right கோர்ட்கு சென்று சூர்யா & சந்துரு குழுவிடமிருந்து தனக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய எல்லா உரிமைகளுக்கான சன்மானத்தையும் அபராத தொகையையும் பெருமையுடன் பெற ஏற்பாடு செய்யவேண்டும். உண்மை கதையை உண்மையாக உண்மை பெயர்களுடன் உரிமம் பெற்று எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. There may be some nexes between Chandru and Surya team time will bring the truth otherwise Chandru should have adviced Surya to get permission from Parvathy Ps.: வெளிப்படையாக பேசும் சிவகுமார் இதுவரை வாய் திறக்கவில்லை - இதில் ஏதோ மர்மம் உள்ளது
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
20-நவ-202108:15:58 IST Report Abuse
jagan கார்ப்பரேட் அமேசான் மற்றும் கார்ப்பரேட் மதமாற்ற கும்பலுடன் சேர்ந்து கல்லா கட்டிவிட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X