பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மற்றும் 21ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பெற தகுதியான நபர்களில் 71 சதவீதம் பேருக்கு, முதல் தவணையும், 31 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சிகளுக்கு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மற்றும் 21ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பெற தகுதியான நபர்களில் 71 சதவீதம் பேருக்கு, முதல் தவணையும், 31 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் நடைபெறும் பணிக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.18 வயதிற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்தவர்கள் தடுப்பூசியை அவரவர் பகுதியிலேயே செலுத்தி கொள்ளும் வகையில் வாரம்தோறும் ஒருநாள் சிறப்பு முகாம் நடந்தது. மக்களுக்கு விரைவில் கிடைக்கும் வகையில் வாரம் தோறும் இரு தடுப்பூசி முகாம்கள் (வியாழக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை) நடத்த அரசு உத்தேசித்துள்ளது.இதையொட்டி, இன்று 18 ம் தேதி மற்றும் வரும் 21ம் தேதி 1,000 முகாம்கள் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X