இணையதள மோசடிகள் குறித்து விழிப்புணர்வு அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இணையதள மோசடிகள் குறித்து விழிப்புணர்வு அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கோரிக்கை

Added : நவ 18, 2021
Share
புதுச்சேரி : ''இணையதளத்தில் அதிகரித்து வரும் மின்சார பைக், எலக்ட்ரிக் சைக்கிள் மோசடி குறித்து மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என, அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:இணையதளத்தில் நாளுக்கு நாள் விதவிதமான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிக்கணக்கு விபரங்களை திருடுவது, நண்பர்கள்

புதுச்சேரி : ''இணையதளத்தில் அதிகரித்து வரும் மின்சார பைக், எலக்ட்ரிக் சைக்கிள் மோசடி குறித்து மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என, அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:

இணையதளத்தில் நாளுக்கு நாள் விதவிதமான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கிக்கணக்கு விபரங்களை திருடுவது, நண்பர்கள் பட்டியலை பெற்று, அவர்களுக்கு தவறான செய்திகளை அனுப்புவது என பல மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.கொரோனாவிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது போன்ற, மக்கள் அதிகம் படிக்க விரும்பும் தகவல்களை செய்திகளாக அனுப்பி, 'கீழ்க்கண்ட லிங்க்'கை கிளிக் செய்தால், முழுமையாக படிக்கலாம் என, ஒரு லிங்க் அனுப்புகின்றனர்.தப்பித்தவறி அந்த லிங்க்கை அழுத்தினால், அவ்வளவு தான். நம் வங்கிக்கணக்கு விபரங்கள், கிரெடிட் கார்டு தகவல் போன்றவற்றை திருடி விடுகின்றனர்.

எல்லாம் நொடி நேரத்தில் நடந்து விடுகிறது.தற்போது, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், மின்சார பைக், எலக்ட்ரிக் சைக்கிளை குறி வைத்து இணையதளத்தில் மோசடிகள் அதிகரித்துள்ளது.எலக்ட்ரிக் சைக்கிளுக்கான துணை உபகரணங்கள் குறித்து இணையதளத்தில் தேடுவோருக்கு, 'குமார் அண்ட் குமாரி' (kumarandkumari.com) என்ற இணையதளம் கண்ணில் படுகிறது.

இந்த இணையதளத்தில், எலக்ட்ரிக் சைக்கிள்கள் 98 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.இந்நிறுவனம் குஜராத், சூரத் நகரில் செயல்படுகிறது என குறிப்பிட்டிருந்தாலும், எந்த தொலைபேசி எண்ணும் இல்லை. அந்த இணையதளத்தை அலசி ஆராய்ந்ததில், முழுக்க முழுக்க ஏமாற்று இணையதளம் என தெரிகிறது.

இந்த இணையதளம் குறித்து கூகுளில் தேடியபோது, ஏகப்பட்ட பேர் இந்த இணையதளத்தினால் ஏமாந்து போய் இருப்பதை அறிய முடிந்தது.இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களை பார்க்க வேண்டாம் என, புதுச்சேரி மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களும் இணையதளத்தில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கண்டு ஏமாறக் கூடாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X