பொது செய்தி

இந்தியா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டு: மூவர் கைது

Added : நவ 18, 2021
Share
Advertisement
சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார், அம்மையகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு நடந்தது.எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., ராஜலட்சுமி மேற்பார்வையில், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார், அம்மையகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டு நடந்தது.

எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., ராஜலட்சுமி மேற்பார்வையில், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு பதியப்பட்ட குற்றவாளிகளின் கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்தனர். அதில், 2 பழைய குற்றவாளிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

அதன் அடிப்படையில், சின்னசேலம் அசேபா நகரைச் சேர்ந்த பாபு மகன் பிரகாஷ், 27; கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையம் பெரியசாமி மகன் தர்மராஜ், 35; ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.அதில், இருவரும், பெரியசிறுவத்துார் மற்றும் அம்மையகரம் பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.மேலும், இவர்களோடு, தர்மராஜின் தம்பி சக்திவேல், 31; என்பவரும் ஈடுபட்டது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, பிரகாஷ், தர்மராஜ், சக்திவேல் ஆகிய மூவரையும் கைது செய்து, 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 38 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.மூவர் மீதும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 13 வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X