பொது செய்தி

இந்தியா

பெங்களூரில் மீண்டும் அபார்ட்மென்ட்டில் தீ விபத்து

Added : நவ 18, 2021
Share
Advertisement
எலக்ட்ரானிக் சிட்டி : பெங்களூரில் மீண்டும் அபார்ட்மென்ட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பிளாட்டுகளுக்கு தீ பரவி, அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகின.பெங்களூரு ஆனேக்கல் அருகே உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சம்பிகே நகர் வசுந்தரா லே - அவுட்டில், 'வி மார்க்ஸ்' என்ற ஐந்து அடுக்கு அபார்ட்மென்ட் உள்ளது. இதில், நேற்று மதியம் இரண்டாவது மாடியில் உள்ள

எலக்ட்ரானிக் சிட்டி : பெங்களூரில் மீண்டும் அபார்ட்மென்ட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பிளாட்டுகளுக்கு தீ பரவி, அங்கிருந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகின.பெங்களூரு ஆனேக்கல் அருகே உள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சம்பிகே நகர் வசுந்தரா லே - அவுட்டில், 'வி மார்க்ஸ்' என்ற ஐந்து அடுக்கு அபார்ட்மென்ட் உள்ளது.

இதில், நேற்று மதியம் இரண்டாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீப்பிடித்தது. உடனே மளமளவென, இரண்டு பிளாட்டுகளுக்கு பரவியது. தீ பிடித்தவுடன் அபார்ட்மென்டில் இருந்த குடியிருப்புவாசிகள் வெளியில் ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 'டிவி' குளிர்சாதன பெட்டி உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. எனினும், உயிர் சேதம் ஏற்படவில்லை. காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அபார்ட்மென்டில் தீ பிடித்தவுடன், 119ம் நம்பர் பிளாட்டின் வளர்ப்பு நாய் எச்சரிக்கை அடைந்து, அபார்ட்மென்ட் முழுக்க ஓடி ஒவ்வொரு பிளாட் முன்பும் சத்தமாக குரைக்க ஆரம்பித்தது.நாயின் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் வெளியில் வந்து பார்த்தபோது, தீ விபத்து ஏற்பட்டது தெரிந்து, பாதுகாப்பாக தப்பி பிழைத்தனர். அந்த நாயின் சமயோசிய திறனை கண்டு குடியிருப்புவாசிகள் மெய்சிலிர்த்து போயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X