பொது செய்தி

தமிழ்நாடு

கீழணை கொள்ளிடம் ஆற்றில் 60,000 கனஅடி தண்ணீர் திறப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணையில் இருந்து அதிகமாக வெளியேற்றப்படும் உபரிநீரால், கீழணை கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 45 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

காட்டுமன்னார்கோவில் : மேட்டூர் அணையில் இருந்து அதிகமாக வெளியேற்றப்படும் உபரிநீரால், கீழணை கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 45 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் முக்கொம்பு மேல் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் நேரடியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. காவிரி ஆறு வழியாக அதிக அளவு தண்ணீர் கல்லணைக்கு வருகிறது.கல்லணையில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, கல்லணை கால்வாய் போன்ற பாசன ஆறுகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.டெல்டாவில் மழை பெய்வது நின்றதால் கீழணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. கடந்த நான்கு நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் 20 ஆயிரம் கன அடிக்கு குறைவான தண்ணீர் திறந்து விடப்பட்டது

தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளள வை எட்டிய நிலையில், அதில் இருந்து 45 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதனுடன் மழைநீரும் சேர்ந்து கீழணைக்கு 60 ஆயிரம் கன அடியாக வருகிறது. கீழணை நீர் மட்டம் 7 அடியாக உள்ளது.கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்காத நிலையில், அணைக்கு வரும் 60 ஆயிரம் கன அடி தண்ணீர், கீழ் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 65 கன அடியாக உள்ளது.வீராணம் ஏரி நீர் மட்டம் 45.30 அடியாக இருந்தது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 62 கன அடி தண்ணீரும், டெல்டா பாசனத்திற்கு 124 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் 935.20 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X