பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கும் அமைச்சர்களின் நடவடிக்கையை , பா.ஜ., கண்காணிக்கிறது

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'பிட் காயின்' வழக்கில், சொந்த கட்சியினருக்கு எதிராக, எதிர்க்கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கும் இரண்டு அமைச்சர்களின் நடவடிக்கையை, பா.ஜ., மேலிடம் கண்காணிக்கிறது.சில நாட்களுக்கு முன், டில்லிக்கு சென்றிருந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, பிட் காயின் வழக்கு தொடர்பாக, இரண்டு அமைச்சர்களே எதிர்க்கட்சியினருக்கு தகவல் கொடுப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

பெங்களூரு : 'பிட் காயின்' வழக்கில், சொந்த கட்சியினருக்கு எதிராக, எதிர்க்கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கும் இரண்டு அமைச்சர்களின் நடவடிக்கையை, பா.ஜ., மேலிடம் கண்காணிக்கிறது.

சில நாட்களுக்கு முன், டில்லிக்கு சென்றிருந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, பிட் காயின் வழக்கு தொடர்பாக, இரண்டு அமைச்சர்களே எதிர்க்கட்சியினருக்கு தகவல் கொடுப்பதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் கூறி, கவலை தெரிவித்துள்ளார்.இதை தீவிரமாக கருதிய பா.ஜ., மேலிடம், சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களின் நடவடிக்கையை கண்காணிக்க, ரகசிய குழுவை பெங்களூருக்கு அனுப்பியுள்ளது.தற்போது பா.ஜ., அரசில் உள்ள, இரண்டு அமைச்சர்கள், 2023ன் தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு முழுக்கு போட்டு, வேறொரு கட்சிக்கு செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இவ்விரு அமைச்சர்களே, எதிர்க்கட்சியினருக்கு தகவல் கொடுப்பதாக தெரிகிறது.இதனால் எச்சரிக்கையடைந்த பா.ஜ., மேலிடம், தனியார் ஏஜன்சியின் குழுவை, பெங்களூருக்கு அனுப்பி, இரண்டு அமைச்சர்கள் பற்றிய தகவலையும் சேகரிக்கின்றனர். இக்குழுவினர் ரகசிய அறிகையை அளிப்பர். ஒருவேளை அமைச்சர்கள், கட்சிக்கு துரோகம் செய்தது தெரிந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.மூன்று நாட்களுக்கு முன்பே, பெங்களூருக்கு வந்த குழுவினர், சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையை, ரகசியமாக கண்காணிக்கின்றனர். அமைச்சர்கள் மட்டுமின்றி, சில எம்.எல்.ஏ.,க்கள் மீதும், சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களும் கண்காணிப்பு வளையத்துள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X