கொலைக் குற்றவாளியை போலீசார் சுட்டு பிடிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொலைக் குற்றவாளியை போலீசார் சுட்டு பிடிப்பு

Added : நவ 18, 2021
Share
அசோக் நகர் : தலைமறைவாக இருந்த கொலைக்குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.பெங்களூரு பெல்லந்துாரில் முன்னா குமார் என்பவர் இம்மாதம் 10ல் கொலை செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில் ரவுடி பழனி, 35 என்பவர் தான் அவரை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், கொலைக்குற்றவாளி பழனி நேற்று அசோக் நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு

அசோக் நகர் : தலைமறைவாக இருந்த கொலைக்குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.பெங்களூரு பெல்லந்துாரில் முன்னா குமார் என்பவர் இம்மாதம் 10ல் கொலை செய்யப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில் ரவுடி பழனி, 35 என்பவர் தான் அவரை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், கொலைக்குற்றவாளி பழனி நேற்று அசோக் நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.சி.பி., பரமேஸ்வர், பெல்லந்துார் இன்ஸ்பெக்டர் ஹரிஷ் குமார் ஆகியோர் அசோக் நகருக்கு சென்றனர். அங்குள்ள சுடுகாடு ஒன்றில் பழனி பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சிக்கும்போது, இன்ஸ்பெக்டர் ஹரிஷ்குமார் மீது தாக்குதல் நடத்தி தப்ப முயன்றார். இதனால் ரவுடியின் காலை குறிவைத்து ஏ.சி.பி., பரமேஸ்வர் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த ரவுடி, ஓட முடியாமல் விழுந்தார். அவரை பிடித்த போலீசார், மருத்துவமனையில் அனுமதித்து, விசாரணை செய்து வருகின்றனர்.இவர் மீது, 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X