பொது செய்தி

இந்தியா

'அயர்ன் மேன்' மாணவனுக்கு ஆனந்த் மஹிந்திரா உதவி

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி : மணிப்பூரைச் சேர்ந்த திறமையான மாணவனின் பொறியியல் கனவை, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றியுள்ளார்.தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, 66, சமூக பிரச்னைகள் உட்பட பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். வித்தியாசமான திறமைகள் உடைய இளைஞர்களை ஊக்குவிப்பதோடு, பொருளாதார வசதி அற்ற இளைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.வட கிழக்கு மாநிலமான
anand mahindra, ஆனந்த் மகிந்திரா, மணிப்பூர்,

புதுடில்லி : மணிப்பூரைச் சேர்ந்த திறமையான மாணவனின் பொறியியல் கனவை, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றியுள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, 66, சமூக பிரச்னைகள் உட்பட பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். வித்தியாசமான திறமைகள் உடைய இளைஞர்களை ஊக்குவிப்பதோடு, பொருளாதார வசதி அற்ற இளைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் இம்பாலை சேர்ந்த பிரேம் என்ற மாணவன், 'ஹாலிவுட் சூப்பர் ஹீரோ'வான, 'அயர்ன் மேன்' அணியும் இரும்பு கவச உடையை, கழிவுகளை வைத்து தயாரித்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் வந்த புகைப்படங்களை பார்த்த ஆனந்த் மஹிந்திரா, அந்த மாணவனின் திறமையை பாராட்டியதோடு, எதிர்கால கனவை கேட்டறிந்தார். பொறியியல் படிக்க விரும்பிய அந்த மாணவனுக்கு அதற்கான வசதி இல்லை.இதையடுத்து அந்த மாணவனை பொறியல் படிக்க உதவி செய்வதாக ஆனந்த் மஹிந்திரா வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் தெலுங்கானாவின் ஐதராபாதில் உள்ள மஹிந்திரா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவன், பொறியியல் படிக்க ஏற்பாடு செய்துள்ளார். விமானம் வாயிலாக மாணவனை அழைத்து, பல்கலையில் சேர்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஆனந்தின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X