பொது செய்தி

இந்தியா

ஓட்டுரிமை பெற விண்ணப்பித்துள்ள, ஏழு பா.ஜ., எம்.எல்.சி.,களுக்கு, 'நோட்டீஸ்'

Added : நவ 18, 2021
Share
Advertisement
கலபுரகி ; கலபுரகி மாநகராட்சி பகுதியில் ஓட்டுரிமை பெற விண்ணப்பித்துள்ள, ஏழு பா.ஜ., எம்.எல்.சி.,களுக்கு, 'நோட்டீஸ்' வழங்க கர்நாடக உயர்நீதிமன்ற கலபுரகி கிளை நேற்று உத்தரவிட்டது.கலபுரகி மாநகராட்சியின், 55 வார்டுகளுக்கு கடந்த செப்டம்பரில் தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை வராததால், இதுவரை மேயர், துணை மேயர் தேர்தல் நடக்கவில்லை.இதற்கிடையில்,

கலபுரகி ; கலபுரகி மாநகராட்சி பகுதியில் ஓட்டுரிமை பெற விண்ணப்பித்துள்ள, ஏழு பா.ஜ., எம்.எல்.சி.,களுக்கு, 'நோட்டீஸ்' வழங்க கர்நாடக உயர்நீதிமன்ற கலபுரகி கிளை நேற்று உத்தரவிட்டது.

கலபுரகி மாநகராட்சியின், 55 வார்டுகளுக்கு கடந்த செப்டம்பரில் தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை வராததால், இதுவரை மேயர், துணை மேயர் தேர்தல் நடக்கவில்லை.இதற்கிடையில், எம்.எல்.சி.,களுக்கு ஓட்டுரிமை இருப்பதால், மற்ற பகுதிகளை சேர்ந்த ஏழு பா.ஜ., எம்.எல்.சி.,க்களின் விலாசம் கலபுரகிக்கு மாற்றப்பட்டுள்ளது. தங்களுக்கும் ஓட்டுரிமை வழங்கும்படி விண்ணப்பித்துள்ளனர்.இதனால் கோபமடைந்த காங்கிரஸ், தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன் மற்ற பகுதிகளின் எம்.எல்.சி.,க்களின் விலாசத்தை மாற்றி ஓட்டுரிமை பெறுவதற்கு முயற்சிப்பதாக, காங்கிரஸ் கவுன்சிலர் வர்ஷா ஜாவே, திருப்தி லாகே ஆகியோர், கர்நாடக உயர்நீதிமன்ற கலபுரகி கிளையில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கு, நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏழு பா.ஜ., - எம்.எல்.சி.,களுக்கு விளக்கம் அளிக்க கோரி 'நோட்டீஸ்' வழங்கும்படி உத்தரவிட்டார்.மேலும், இது குறித்து வரும் 29க்கு பதிலளிக்கும்படி அரசுக்கு அறிவுறுத்தி, விசாரணை அன்றைக்கு ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X