சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வேலியே பயிரை மேய்ந்த கதை

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' ஆக பணியாற்றி, சிறுமியை சீரழித்தது அம்பலம் ஆகியுள்ளது.புதுச்சேரி, அண்ணா நகர் மசாஜ் சென்டரில், கடந்த அக். 16ம் தேதி உருளையன்பேட்டை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு, மசாஜ் சென்டர் நடத்திய பெண் உட்பட 4 பேரை கைது


புதுச்சேரி : வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' ஆக பணியாற்றி, சிறுமியை சீரழித்தது அம்பலம் ஆகியுள்ளது.

புதுச்சேரி, அண்ணா நகர் மசாஜ் சென்டரில், கடந்த அக். 16ம் தேதி உருளையன்பேட்டை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு விபசார தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு, மசாஜ் சென்டர் நடத்திய பெண் உட்பட 4 பேரை கைது செய்தனர்.மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் 17 வயது சிறுமி என்பதும், அவரை 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அதையடுத்து, 40 பேர் மீதும் 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்தனர்.இதில், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், புதுச்சேரி கொட்டுப்பாளையம் அருண் ஆகிய இருவர் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், புதுச்சேரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பூபதி, 24; என்பவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், அவர், 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' ஆக நியமிக்கப்பட்டவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

பூபதி, 2018ம் ஆண்டு, சட்டம் -ஒழுங்கு சீனியர் எஸ்.பி., மூலம், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' ஆக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் காக்கி சீருடை அணிந்து, போலீசாருடன் பணியாற்றினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அண்ணா நகரில் இயங்கி வந்த மசாஜ் சென்டருக்கு சென்று, போலீஸ் என கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து, முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பூபதி அனுப்பப் பட்டார்.அங்கு, போலீசாருக்கு எடுபிடி வேலை செய்து கொண்டே, வெளியே போலீஸ் என கூறிக் கொண்டு, சுற்றித் திரிந்து வந்தது, போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
18-நவ-202109:47:04 IST Report Abuse
Thanu Srinivasan இச்சம்வத்தில் கற்பழிப்பு செய்யபட்டார் என்று கூறுவது கடைந்தெடுக்கபட்ட அயோக்கியதனம். அவள் தன்னை எவரும் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X