பொது செய்தி

இந்தியா

சீக்ரெட் சிங்காரம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோலாரில் தீராத கோளாறு!குயின்ஸ் ரோட்டின் கட்சி ஹெட் ஆபிசில் செங்கோட்டை 'மாஜி' முனியும், சீனிவாசப்பூர் அசம்பிளிகாரரும் வாள் சண்டைப்போல வாய்சண்டை போட்டு, ஷார்ப்பா சிங்குலர் வார்த்தைகளை வீசி இருக்காங்க.ஒரு கட்டத்தில், எம்.பி., தேர்தலில் பூவுக்கு சப்போர்ட் செய்து அவர்களை ஜெயிக்க வைத்தவங்களுக்கு கை கட்சியில் பேச அருகதையே கிடையாதுன்னு முனி துள்ளி

கோலாரில் தீராத கோளாறு!குயின்ஸ் ரோட்டின் கட்சி ஹெட் ஆபிசில் செங்கோட்டை 'மாஜி' முனியும், சீனிவாசப்பூர் அசம்பிளிகாரரும் வாள் சண்டைப்போல வாய்சண்டை போட்டு, ஷார்ப்பா சிங்குலர் வார்த்தைகளை வீசி இருக்காங்க.ஒரு கட்டத்தில், எம்.பி., தேர்தலில் பூவுக்கு சப்போர்ட் செய்து அவர்களை ஜெயிக்க வைத்தவங்களுக்கு கை கட்சியில் பேச அருகதையே கிடையாதுன்னு

முனி துள்ளி பாய்ந்திருக்கிறாரு.டென்ஷன் பார்ட்டியான ர.குமார் விடுவாரா... ஒருமையில் தீபாவளி சரவெடியாய், 'டமார் டுமீல்' என்று வார்த்தைகளில் விளையாடி இருக்கிறார்.இவங்களுக்கு பஞ்சாயத்து செய்த நிலத்தலைவரும், எதிர்க் கட்சித் தலைவரும் சோர்ந்து போயிட்டாங்க.எம்.எல்.சி., தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கை வேட்பாளரை, கோஷ்டி மோதலே தோற்கடித்து விடும்னு தெரிஞ்சு போச்சாம்.

மும்முனை போட்டியில் மாண்டியா!மாண்டியா, அது புல்லுக்கட்டோட எஃகு கோட்டைன்னு இப்பவும் உறுதியா நம்புறாங்க.ஏதோ போன முறை லோக்சபா தேர்தலில் வெற்றி, 'ஸ்லிப்' ஆயிடுச்சு. ஆனால் டிசம்பர் 10ல் நடக்கும் எம்.எல்.சி., தேர்தலில் நாங்க தான் ஜெயிக்க போறோம்னு ஓட்டு போடுறவங்க கணக்கு விபரத்தை, கூட்டி கழித்து பார்த்து கொண்டாட்டமா இருக்காங்க.புல்லுக்கட்டுக்கு அடுத்து கடும் போட்டியில் எப்பவும் இருப்பவங்க கைகாரர்கள். இம்முறையும் சேலஞ்சர்களாக வெளியே வந்துட்டாங்க.

வெற்றிக்கனி பறிக்க ஏணி தயார் செய்றாங்க.இந்த ரெண்டு கட்சிகளோடு மூன்றாவதாக பூ வேட்பாளர் கோதாவில் இறங்கி கலக்கப் போறதா சொல்றாங்க. இம்முறை மும்முனை போட்டி வெயிட்டா இருக்க போகுது. இங்கு, 232 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 3,818 பேர், 8 நகராட்சி, டவுன் சபைகளில் இருந்து 199, ஒரு எம்.பி., 7 எம்.எல்.ஏ.,கள் ஓட்டுரிமை உள்ளவர்கள்.இந்த கால்குலேஷனை வைத்து தான் போட்டி போடுறாங்க.

பூவுக்கு குடகு சாதகம்!பனி படர்ந்த குடகு மாவட்ட எம்.எல்.சி., தேர்தலில் பூ கட்சியில் சீட் தகராறு ஓவரா இருக்குது. அதிலும் மடிக்கேரி அசம்பிளிகாரரின் சகோதரர்கள் இருவர் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட போறாங்க.குடும்பத்தினர் பேசி பார்த்தாச்சாம். கட்சி மேலிடமும் சொல்லி பார்த்தாங்க. இந்த ரெண்டு போரோட சச்சரவு காரணத்தை காட்டி, 'சீட்' வேறொருவருக்கு வழங்கலாமென உள்வேலை நடக்கிறது.பூ கட்சியினர் 20 பேர் சீட் கேட்டு விண்ணப்பித்திருக்காங்க.

104 கிராம பஞ்சாயத்துகளில் 1, 260 பேர் பெரும்பாலும் பூக்காரங்களே. மடிக்கேரி நகரசபை, 3 பேரூராட்சி பூ வசம் தான். ஒரு எம்.பி., 2 எம்.எல்.ஏ., வும் பூக்காரர்களே. இதனால் கை கட்சியில் வேட்பாளர்களை போட்டியிட வைத்தாலும் ஓட்டு போடுறவங்களிடம் ஓட்டுப் பெற மிகவும் கஷ்டப் படணுமாம். புல்லுக்கட்டுக்காரர்களும் நாங்களும் தேர்தலில் இருக்க போறதா களத்தில் வேட்பாளரை அடையாளம் காட்ட போறாங்களாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X