பொது செய்தி

இந்தியா

தடுப்புகளை தாண்டி காட்டு யானை வெளியே வந்தது

Added : நவ 18, 2021
Share
Advertisement
சாம்ராஜ்நகர் : வன விலங்குகளின் தொந்தரவை கட்டுப்படுத்தும் நோக்கில், வனப்பகுதி எல்லையில் பொருத்தப்பட்டுள்ள உயரமான ரயில் தண்டவாள கம்பி தடுப்புகளை, காட்டு யானை தாண்டி, வெளியே வந்தது.கர்நாடகாவின், பெரும்பாலான கிராமங்கள், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இக்கிராமங்கள் யானை, சிறுத்தை, புலி என, பல்வேறு வன விலங்குகளின் தொந்தரவால் அவதிப்படுகின்றன. யானைகள் கிராமங்களில்

சாம்ராஜ்நகர் : வன விலங்குகளின் தொந்தரவை கட்டுப்படுத்தும் நோக்கில், வனப்பகுதி எல்லையில் பொருத்தப்பட்டுள்ள உயரமான ரயில் தண்டவாள கம்பி தடுப்புகளை, காட்டு யானை தாண்டி, வெளியே வந்தது.கர்நாடகாவின், பெரும்பாலான கிராமங்கள், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

இக்கிராமங்கள் யானை, சிறுத்தை, புலி என, பல்வேறு வன விலங்குகளின் தொந்தரவால் அவதிப்படுகின்றன. யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க, வனத்துறை எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பயனளிக்கவில்லை. வனப்பகுதி எல்லையில், பள்ளம் வெட்டி வைத்தனர். ஆனால் யானைகள், மிகவும் புத்திசாலிகள் என்பதை நிரூபிக்கும் வகையில், மண்ணை தள்ளி பள்ளங்களை மூடி, சமன்படுத்தி கிராமங்களுக்குள் நுழைகின்றன.

அதன்பின், ரயில் தண்டவாள இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, வனப்பகுதியை சுற்றிலும் தடுப்பு அமைத்துள்ளனர். ஆனால் யானைகளின் முன், இத்திட்டமும் புஸ்வாணாமாகிவிட்டது. சாம்ராஜ்நகரின், பன்டிப்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, ஓம்கார் மண்டல வனப்பகுதியில், நேற்று காலை காட்டு யானையொன்று, உயரமான ரயில்வே தடுப்பை தாண்டி, காட்டிலிருந்து வெளியே வந்தது. இக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X