பொது செய்தி

இந்தியா

லக்கன் ஜார்கிஹோளிக்கு ஆதரவாக பிரசாரம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெலகாவி : பா.ஜ., மேலிடம் டிக்கெட் அறிவிப்பதற்கு முன்பே, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, தன் சகோதரர் லக்கன் ஜார்கிஹோளிக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.கர்நாடக சட்டமேலவையின், 25 இடங்களுக்கு டிசம்பர் 10ல், தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான பா.ஜ., டிக்கெட்டுக்கு, பலத்த போட்டி எழுந்துள்ளது. பெலகாவியில் தங்களின் இளைய சகோதரர் லக்கனுக்கு டிக்கெட் பெற, ஜார்கிஹோளி

பெலகாவி : பா.ஜ., மேலிடம் டிக்கெட் அறிவிப்பதற்கு முன்பே, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, தன் சகோதரர் லக்கன் ஜார்கிஹோளிக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

கர்நாடக சட்டமேலவையின், 25 இடங்களுக்கு டிசம்பர் 10ல், தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான பா.ஜ., டிக்கெட்டுக்கு, பலத்த போட்டி எழுந்துள்ளது. பெலகாவியில் தங்களின் இளைய சகோதரர் லக்கனுக்கு டிக்கெட் பெற, ஜார்கிஹோளி சகோதரர்கள் 'லாபி'நடத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, டில்லிக்கும் சென்று வந்தார்.கட்சி மேலிடம் இன்னும் டிக்கெட் உறுதி செய்யாத நிலையில், தன் சகோதரர் லக்கனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்து ஓட்டு சேகரிப்பில், ரமேஷ் ஈடுபட்டுள்ளார்.கோகாக் தொகுதிக்குட்பட்ட, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களை, நேற்று சந்தித்த ரமேஷ், தன் சகோதரருக்கு ஆதரவளிக்கும்படி கோரினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X