கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.நோயாளிகளை பார்ப்பதற்கு இரு சக்கர வாகனங்களில் வரும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் ஆங்காங்கே பல இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.

மருத்துவமனையில் உள்ள அனைத்து கட்டடங்கள் முன்பும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஆம்புலன்ஸ் வந்து செல்ல சிரமம் ஏற்பட்டது.இதனால், இரு சக்கர வாகனங்கள் உள்ளே அனுமதிக்காததையடுத்து மருத்துவமனைக்கு வெளியே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் பயணிகள் நிழற்குடை பகுதியில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர்.சாலையை அடைத்தவாறு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கச்சிராயபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், பயணிகள் நிழற்குடையில் பஸ்சுக்காக காத்திருப்போரும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனை பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X