பொது செய்தி

இந்தியா

56 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நவம்பர் 26க்குள் இட ஒதுக்கீடு

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெங்களூரு : மாநிலத்தில் பதவிகாலம் நிறைவுபெற்ற, 56 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நவம்பர் 26க்குள் இட ஒதுக்கீடு அறிவித்து, டிசம்பர் 30க்குள் தேர்தல் நடத்தும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பதவிகாலம் நிறைவுபெற்ற, 56 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பல்வேறு காரணங்களை சொல்லி தேர்தல் நடத்தப்படவில்லை.இதையறிந்த கர்நாடக உயர்நீதிமன்றம் சுய வழக்கு பதிவு

பெங்களூரு : மாநிலத்தில் பதவிகாலம் நிறைவுபெற்ற, 56 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நவம்பர் 26க்குள் இட ஒதுக்கீடு அறிவித்து, டிசம்பர் 30க்குள் தேர்தல் நடத்தும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதவிகாலம் நிறைவுபெற்ற, 56 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பல்வேறு காரணங்களை சொல்லி தேர்தல் நடத்தப்படவில்லை.இதையறிந்த கர்நாடக உயர்நீதிமன்றம் சுய வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான முதன்மை அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதி குறிப்பிட்டதாவது:சில உள்ளாட்சிகளுக்கு, 2018லேயே பதவி காலம் முடிந்துள்ளது. தேர்தல் நடத்த முடியாத அளவுக்கு தேர்தல் ஆணையத்துக்கு தகுதியில்லையா... தேர்தல் நடத்தப்படுகிறதா என்பதையும் நீதிமன்றம் தான் கண்காணிக்க வேண்டுமா?எத்தனை நாட்களுக்குள் வார்டுகளின் இட ஒதுக்கீடு பட்டியல் வழங்குவீர். பதில் அளிக்க மதியம் 2:30 மணி வரை நேரம் தருகிறேன். அப்போது, நகர அபிவிருத்தி துறை முதன்மை செயலர் நேரில் ஆஜராக வேண்டும்

.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.மதிய உணவு இடைவேளைக்கு பின், மீண்டும் நீதிமன்றம் கூடியது. அப்போது, நகர அபிவிருத்தி துறை கூடுதல் தலைமை செயலர் ராகேஷ் சிங் ஆஜரானார்.இந்த வேளையில், நவம்பர் 26க்குள் வார்டுகளின் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது, இட ஒதுக்கீடு வழங்கினால் எப்போது தேர்தல் நடத்துவீர்கள் என்று நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பியது.இதற்கு பதிலளித்து, தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் பணீந்திரா கூறுகையில், நவம்பர் 26க்குள் இட ஒதுக்கீடு அறிவித்தால், டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றார்.பின், நீதிபதி உத்தரவிட்டதாவது:பதவிகாலம் முடிந்த நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டுகளுக்கு, நவம்பர் 26 க்குள் அரசு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம், டிசம்பர் 30க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X