ஆப்கனில் பயங்கரவாதம் கூடாது இந்தியா, பிரான்ஸ் வலியுறுத்தல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'தன் மண்ணில் பயங்கரவாதத்தை பயன்படுத்த, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது' என, இந்தியா, பிரான்ஸ் கூட்டாக வலியுறுத்தி உள்ளன.பயங்கரவாதத்துக்கு எதிரான, இந்தியா, பிரான்ஸ் கூட்டு பணிக் குழுவின் கூட்டம், ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடக்கிறது.இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சகம்

புதுடில்லி : 'தன் மண்ணில் பயங்கரவாதத்தை பயன்படுத்த, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது' என, இந்தியா, பிரான்ஸ் கூட்டாக வலியுறுத்தி உள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான, இந்தியா, பிரான்ஸ் கூட்டு பணிக் குழுவின் கூட்டம், ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடக்கிறது.இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பாக, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்துக்கு எதிராக, தொடர்ந்து இணைந்து செயல்படுவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பயங்கரவாதம் தொடர்பான கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது, பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதை உறுதி செய்வது என, தொடர்ந்து இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை தன் மண்ணில் நடத்த, ஆப்கானிஸ்தான் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது என, வலியுறுத்தப்பட்டுள்ளது. லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X