எந்த விவகாரம் கிடைக்கும் அதை வைத்து குளிர் காயலாம் என காத்திருந்த சில கட்சிகளின் தலைவர்கள்....

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா. முத்தரசன் அறிக்கை: மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கின்றனர் என்பதை, நடிகர் சூர்யா நினைவில் வைத்து, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி, சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும்; அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்.எந்த விவகாரம் கிடைக்கும், அதை வைத்து குளிர் காயலாம் என காத்திருந்த சில கட்சிகளின் தலைவர்கள்,
முத்தரசன், அண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா. முத்தரசன் அறிக்கை: மனிதத்தை நேசிக்கும் அனைவரும் தன்னோடு இருக்கின்றனர் என்பதை, நடிகர் சூர்யா நினைவில் வைத்து, அச்சுறுத்தல்களை புறந்தள்ளி, சமூக அக்கறையுள்ள படங்களைத் தர வேண்டும்; அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும்.


எந்த விவகாரம் கிடைக்கும், அதை வைத்து குளிர் காயலாம் என காத்திருந்த சில கட்சிகளின் தலைவர்கள், சூர்யா விவகாரத்தில் மூக்கை நுழைத்து, தங்கள் இருப்பை காண்பிக்கின்றனர். அவர்களில் நீங்களும் ஒருவராகி விடாதீர்கள்!



த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழக அரசு, மாணவர்களின் பாதுகாப்பான கல்விக்கும், கற்றலுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். கோவையில் மாணவிக்கு நடந்தது போன்ற கொடுமை, இனி தமிழகத்தில் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கல்வித்துறையின் கறுப்பாடுகளை களையெடுத்து விட்டால், பிரச்னை இருக்காது. அந்த ஆடுகள், பசுந்தோல் போர்த்திய புலி போல அல்லவா இருக்கின்றன...



மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு: கட்சி வேலையை முழுமையாக செய்தால், பதவி தேடி வரும். பா.ஜ.,வில் பதவி என்பது ஒரு பொறுப்பு. எனக்கும் மாநில அளவில், தலைவர் என்ற பெயரில் சேவகன் என்ற பொறுப்பு தான் உள்ளது.


latest tamil news




அப்போ நீங்க, தமிழக, பா.ஜ.,வின் தலைமை சேவகனாக இருக்கிறேன் என்கிறீர்கள். பணிவு, பணிவு... அ.தி.மு.க.,விலும் இப்படித் தான் கூறுகின்றனர். இதெல்லாம் வேலை செய்ய வைக்கும் தந்திரமல்லவா!



தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி: பிரதமர் மோடி கேதார்நாத்தில் ஆற்றிய 'வீடியோ' உரை, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சட்டத்திற்கு புறம்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சட்டத்திற்கு புறம்பான காரியங்கள் தான் கோவில்களில் நடக்கக் கூடாது; கோவில் விழா நடந்ததில் எந்த தவறும் இல்லையே... உ.பி.,யில் உங்கள் கட்சி தனித்து போட்டியிட போகுதாம். போய் பிரியங்காவுக்கு புத்தி சொல்லுங்க!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: மக்கள் பாதிப்படையும் போது நேரில் சென்று உதவ வேண்டும் என, எங்கள் முன்னாள தலைவர் ஜெயலலிதா எங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். அதன்படி எங்கள் கட்சியினர், தமிழகம் முழுதும் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.


மழை நீர் வடிகால்களை அவ்வப்போது துார் வார வேண்டும்; மழை நீர் செல்லும் கால்வாய்களை ஆழப்படுத்த வேண்டும் என்றெல்லாம் உங்கள் மறைந்த தலைவி சொல்லித் தரவில்லையா?


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
18-நவ-202116:42:32 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN இப்போ ஆட்களுக்கு பணம் வருவது ஒரே இடத்திலிருந்து தான் என்று புரிகிறது///////சொந்த நாட்டை எத்துபவனுக்கு நோகாமல் பொழப்பு நடக்குது//////67 இல் சினிமாக்காரங்க பேசிச்சுல மயங்கி தன்னையே விற்றான் தமிழன்/////அதாவது கண்ணை விற்று சித்திரம் வாங்கினான்/////இன்று வரை எதையும் தெளிவாகப் பார்த்து பகுத்தறிந்து கொள்ள முடியாத குருடனாகவே காலம் தள்ளிக் கொண்டிருக்கிறான்///அவன் கண்ணுக்கு சினிமாக் காரன் தான் கண்கண்ட தெய்வம்///அவன் பேச்சுதான் தெய்வ வாக்கு//////சினிமாக்காரனால் தான் தன வீட்டில் அடுப்பெரிகிறது என்று நினைப்பவன்///அவனது திருவடிகளில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவன்/////இல்லையேல் பால் அபிஷகத்தை எல்லாம் தாண்டி, ஒரு சினிமாக்கார கட் அவுட்டுக்கு ரெடியாக ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் எல்லாம் செய்வானா? தமிழகம் தலை நிமிருமா தெரிய வில்லை////
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-நவ-202115:23:33 IST Report Abuse
NicoleThomson அது எப்படி எப்படி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அவர்களே? சொல்லிக் கொடுத்துள்ளாரா? இன்று நடந்து கொண்டிருக்கும் அழிவுகளுக்கெல்லாம் காரணம் கழக (இரு கழகங்களும்) கண்மணிகள் அள்ளிகிட்டே இருந்தது தான் என்று மக்களுக்கு உரைத்தால் போதும் ஏதோ ஒன்று பிஞ்சிரும் அளவுக்கு அடிக்க வருவாங்க , இயற்கையை சுரண்டாதீங்க என்று கதறினாள் கண்டுக்காம லாரி லாரியா சுரண்டுநாங்களே
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
18-நவ-202114:32:02 IST Report Abuse
s t rajan திரு முத்தரசன் அவர்களே, உண்மை சம்பவத்தை எடுக்கும் போது ஏன் இந்த விஷமத்தனமான பெயரிடல், இந்து தெய்வங்களின் படங்களை காண்பித்தால் போன்ற பித்தலாட்டம் ? அந்த தவறுகளை, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா, செய்ய வேண்டிய காரணம் என்ன ? ஒரு தவறை வெளிச்சம் காட்ட இவர் ஏன் இந்த இந்து எதிர்ப்பு முறைகளை கையாள வேண்டும். இது தான் திரு. சிவகுமார் சாரின் வழிகாட்டுதலா ? இதுவே மற்ற மதச் சின்னங்களை, படங்களை, பெயர்களை உபயோகிருத்திருந்தால் நீங்களும் சேர்ந்து தானே எதிர்த்து படத்தை வெளியிட முடியாமல் செய்திருப்பிர்கள். சிவாஜி கணேசன் நடித்த ஏராளமான படங்களில் எங்கேனும் இந்த மாதிரி விஷமங்கள் செய்யப் பட்டிருந்ததா ? கமலை விடுங்கள், அவர் சந்தர்ப்பவாதி. தசாவதாரத்தில் பெருமாளை எவ்வாறெல்லாம் கிண்டல் அடித்தார் என்று உலகறியும். அதனால் தான் நல்ல நடிகராக இருந்தும் மக்களிடம் செல்வாக்கு பெற முடியவில்லை. சூரியா என்று பெயர் வைத்துக் கொண்டு இருளில் செல்வது அவருக்கு நல்ல தல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X