பொது செய்தி

இந்தியா

ஏலத்துக்கு வேகமாக தயாராகும் 6 பொதுத்துறை நிறுவனங்கள்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி: ஆறு பொதுத்துறை நிறுவனங்களை, தனியார்மயமாக்குவதற்கான ஏலம், ஜனவரி மாதத்துக்குள் நடைபெறும் என 'முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை' நிறுவனமான, டி.ஐ.பி.ஏ.எம்., செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார்.'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன்' உள்ளிட்ட 6 பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க, வரும் ஜனவரிக்குள் ஏலம் நடத்த
DIPAM, Aims, Privatise, BPCL, BEML, Current Fiscal, ஏலம், பொதுத்துறை நிறுவனம், தனியார்மயமாக்கல்

புதுடில்லி: ஆறு பொதுத்துறை நிறுவனங்களை, தனியார்மயமாக்குவதற்கான ஏலம், ஜனவரி மாதத்துக்குள் நடைபெறும் என 'முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை' நிறுவனமான, டி.ஐ.பி.ஏ.எம்., செயலர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார்.

'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன்' உள்ளிட்ட 6 பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க, வரும் ஜனவரிக்குள் ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்; இதற்காக, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், பாண்டே தெரிவித்துள்ளார்.கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பின், நடப்பு ஆண்டில் 5 - 6 நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன.


latest tamil news


பாரத் பெட்ரோலியம் உரிய கவனம் செலுத்தும் நிலையில் உள்ளது. 'பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன், பவன் ஹான்ஸ், என்.ஐ.என்.எல்., சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்'ஆகிய நிறுவனங்களுக்கான ஏலம், டிசம்பர் - ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.அதனால், இந்த ஆண்டிலேயே அதற்கான பணிகள் நிறைவுபெற்றுவிடும் என்று பாண்டே தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை பொறுத்தவரை, கடினமாக உழைத்து வருவதாகவும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பங்கு வெளியீடு நடைபெற்றுவிடும் என்றும் பாண்டே தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
18-நவ-202117:58:42 IST Report Abuse
Arasu எல்லாத்தையும் அடி மாட்டு விலைக்கு வித்துட்டு ...அப்புறம் ஏர் இந்தியா மாறி ஏலத்தை கம்மியான்ன விலைக்கு தரது
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
18-நவ-202117:54:55 IST Report Abuse
தமிழன் இந்த நிறுவணங்களாவது HDFC, AXIS பேங்க் மாதிரி பொழச்சுக்கட்டும்.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
18-நவ-202117:35:58 IST Report Abuse
Samathuvan நான் ஏற்கனவே என்னுடைய கருத்தில் பதிவிட்டு இருக்கிறேன். அடுத்ததாக பார்லிமெண்டும் தனியாராக போகுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X