பொது செய்தி

தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டிய அமராவதி அணை; 8000 கனஅடி நீர் வெளியேற்றம்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021
Share
Advertisement
திருப்பூர்: உடுமலை அமராவதி அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் 1.55 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள்
அமராவதி அணை, முழு கொள்ளளவு, வெள்ளம், அபாய எச்சரிக்கை, உபரி நீர்

திருப்பூர்: உடுமலை அமராவதி அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் 1.55 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் பாசன வசதி பெற்று வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அமராவதி அணை 85 அடிக்கும் குறையாமல் இருந்து வருகின்றது.


latest tamil news


நேற்று (நவ.,17) மாலை அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இடைவிடாத கனமழை காரணமாக அமராவதி அணைக்கு 10,000 கன அடி வரை நீர்வரத்து வரத்துவங்கியதால் நள்ளிரவில் அணை முழு கொள்ளளவை எட்டியது. அணை முழுமையாக நிரம்பியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் 8000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் உபரி நீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X