சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயர் மின்கோபுரத்தில் ஏறியவரால் பரபரப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அருகே குடியிருக்க இடம் கேட்டு உயர்மின் கோபுர டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் சூரமங்கலம், கருப்பூர் காந்தி நகர் வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50). இவர் இன்று காலை 08.30 மணி அளவில் டால்மியா போர்டு டாஸ்மாக் கடை எதிரே உள்ள உயர்மின் கோபுர டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.இவர் டால்மியா போர்டு
 உயர் மின்கோபுரத்தில் ஏறியவரால் பரபரப்பு

சேலம்: சேலம் அருகே குடியிருக்க இடம் கேட்டு உயர்மின் கோபுர டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் சூரமங்கலம், கருப்பூர் காந்தி நகர் வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (50). இவர் இன்று காலை 08.30 மணி அளவில் டால்மியா போர்டு டாஸ்மாக் கடை எதிரே உள்ள உயர்மின் கோபுர டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
இவர் டால்மியா போர்டு எம்.ஜி.ஆர்., நகர் ரயில்வே நிலத்தில் குடியிருந்து அகற்றப்பட்டதாகவும், மாற்று இடம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இவருக்கு மனைவி ராமாயி, மகள்கள் கோகிலா, அகிலா உள்ளனர். டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சற்று குடிபோதையில் இருந்துள்ளார்.
தீயணைப்பு துறை வீரர்கள் டவரில் ஏறி அவரை சமாதானம் செய்து அவரை கயிற்றால் கட்டி கீழே விழுந்து விடாமல் பத்திரமாக காப்பாற்றினர். போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X