பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: கார்த்திகை முதல் நாளான நேற்று, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் முழங்க துளசிமணி மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கினர். கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை, 1ல் தொடங்கி, தை, 1 வரை மண்டல பூஜை நடக்கிறது. இதில் ஐயப்பனை தரிசனம் செய்ய, சபரி யாத்திரை புறப்படும் ஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம்

ஈரோடு: கார்த்திகை முதல் நாளான நேற்று, சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் முழங்க துளசிமணி மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கினர். கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை, 1ல் தொடங்கி, தை, 1 வரை மண்டல பூஜை நடக்கிறது. இதில் ஐயப்பனை தரிசனம் செய்ய, சபரி யாத்திரை புறப்படும் ஐயப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். அதன்படி, கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர். கோவில் தலைவர் கேசவன், குருசாமி அருணாசலம் ஆகியோர் பக்தர்களுக்கு மாலையை அணிவித்தனர். நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X