பொது செய்தி

தமிழ்நாடு

இல்லம் தேடி கல்விக்கான கருத்தாளர்களுக்கு பயிற்சி

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு செங்குந்தர் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 1 முதல், 5ம் வகுப்பு வரை உள்ள தன்னார்வலர்களுக்கான குறுவளமைய கருத்தாளர்களான இரண்டாம் தொடக்க நிலை வகுப்பாசிரியர்களுக்கும், ஏ.இ.டி., பள்ளியில் உயர் தொடக்க நிலையான, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான தன்னார்வலர்களுக்கான குறுவள மைய கருத்தாளர்களான ஒரு ஆசிரியர், பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கருத்தாளர்

ஈரோடு: ஈரோடு செங்குந்தர் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 1 முதல், 5ம் வகுப்பு வரை உள்ள தன்னார்வலர்களுக்கான குறுவளமைய கருத்தாளர்களான இரண்டாம் தொடக்க நிலை வகுப்பாசிரியர்களுக்கும், ஏ.இ.டி., பள்ளியில் உயர் தொடக்க நிலையான, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான தன்னார்வலர்களுக்கான குறுவள மைய கருத்தாளர்களான ஒரு ஆசிரியர், பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கருத்தாளர் பயிற்சி நடந்தது. கொரோனாவால், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றம் இடைவெளி, இழப்பை ஈடுசெய்ய தன்னார்வலர்களை கொண்டு தினமும் ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. 'இல்லம் தேடி கல்வி' மூலம் கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது. பள்ளி நேரம் தவிர, பள்ளி வளாகங்களுக்கு வெளியே மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று கற்றல் வாய்ப்பை கல்வி சூழலில் வழங்குகின்றனர். இதற்கான பயிற்சி கருத்தாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. இதுபோல, மாவட்ட அளவில், 216 தன்னார்வலர்கள் குறுவளமைய கருத்தாளர்களாக பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X