பொது செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய வழக்கு: வருவாய் ஆய்வாளருக்கு சிறை

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து, 2011ல் பணியில் இருந்தபோது இறந்தார். குடும்பத்துக்கு நிதி பெற விண்ணப்பித்தபோது, வாரிசு சான்றிதழ் தேவை என தெரிவித்தனர். சுப்பிரமணியின்

ஈரோடு: ஈரோட்டில், லஞ்சம் வாங்கிய வழக்கில் வருவாய் ஆய்வாளருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து, 2011ல் பணியில் இருந்தபோது இறந்தார். குடும்பத்துக்கு நிதி பெற விண்ணப்பித்தபோது, வாரிசு சான்றிதழ் தேவை என தெரிவித்தனர். சுப்பிரமணியின் வாரிசுதாரர்களான மனைவி ராஜேஸ்வரி, மூன்று மகன்கள் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர். இது தொடர்பான விசாரணை, 2013ல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு உள்வட்ட வருவாய் கிராம வருவாய் ஆய்வாளராக மனோகரன் இருந்தார். அவர், வாரிசு சான்றிதழ் வழங்க, 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசில் ராஜேஸ்வரி புகார் செய்தார். ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய, 1,000 ரூபாயை, 2013 நவ.,28ல் ராஜேஸ்வரி வழங்கினார். வருவாய் ஆய்வாளர் மனோகரன் வாங்கிய போது, மறைந்து இருந்த போலீசார் அவரை பிடித்தனர். அப்போதைய டி.எஸ்.பி., புஷ்பராஜ் விசாரணை நடத்தினார். இதையடுத்து மனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது, ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை தலைமை மாஜிஸ்திரேட் புஷ்பராணி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், வருவாய் ஆய்வாளர் மனோகரனுக்கு, வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். 1,000 ரூபபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. மனோகரன் உடனடியாக ஜாமின் பெற்றதால் சிறையில் அடைக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X