பொது செய்தி

தமிழ்நாடு

கோபி, சிறுவலூர், நம்பியூரில் பலத்த மழை

Added : நவ 18, 2021
Share
Advertisement
கோபி: கோபி, சிறுவலூர், நம்பியூர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கோபியில் பெய்த பலத்த மழையால், டவுன் பகுதி குடியிருப்பில் இருந்த வெளியேறிய மழைநீர், கீரிப்பள்ள ஓடை வழியாக பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், தடப்பள்ளி பாசன நிலங்களில், மழைநீர் ஆங்காங்கே குட்டையாக தேங்கி நின்றது. தவிர நம்பியூர் பகுதியில் நேற்று மாலை, 5:00 மணி முதல் பலத்த மழை பெய்தது. வேமாண்டம்பாளையம்,

கோபி: கோபி, சிறுவலூர், நம்பியூர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கோபியில் பெய்த பலத்த மழையால், டவுன் பகுதி குடியிருப்பில் இருந்த வெளியேறிய மழைநீர், கீரிப்பள்ள ஓடை வழியாக பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், தடப்பள்ளி பாசன நிலங்களில், மழைநீர் ஆங்காங்கே குட்டையாக தேங்கி நின்றது. தவிர நம்பியூர் பகுதியில் நேற்று மாலை, 5:00 மணி முதல் பலத்த மழை பெய்தது. வேமாண்டம்பாளையம், பொலவபாளையம், சாணார்பாளையம், பாறைப்புதூர், எல்.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் போல், இரண்டாவது முறையாக, வேமாண்டம்பாளையம் அருகே கொளத்துப்பாளையம் கிராம சாலையில், தரைமட்ட பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்தது. வாலியூர்-அப்பநாயக்கன்பாளையம் சாலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு பெய்த பலத்த மழையால், மீண்டும் அதே சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கொளத்துப்பாளையம் மற்றும் அப்பநாயக்கன்பாளையம் சாலையில் நேற்றிரவு போக்குவரத்து பாதித்தது.

* கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த மாறன் மனைவி பாப்பாத்தி, 60. இவர்கள் ஓட்டு வீட்டில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த பலத்த மழையால், பாப்பாத்தியின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்து சேதமடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X