சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போனில் பெண்களிடம் ஆபாசமாக பேசியவருக்கு தர்ம அடி

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், மொபைல் போனில் பெண்களிடம் ஆபாசமாக பேசியவரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.ஈரோடு, சூரம்பட்டி கிராமடையை சேர்ந்த திருமணமான, 34 வயது பெண்ணுக்கு ஒரு மர்மநபர் மொபைல் போனில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்தார். பெண்ணின் கணவர், உறவினர்கள், அந்த எண் யாருடையது என விசாரித்தபோது, அப்பகுதியில் தங்கி ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபரியும் சிவகங்கை

ஈரோடு: ஈரோட்டில், மொபைல் போனில் பெண்களிடம் ஆபாசமாக பேசியவரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


ஈரோடு, சூரம்பட்டி கிராமடையை சேர்ந்த திருமணமான, 34 வயது பெண்ணுக்கு ஒரு மர்மநபர் மொபைல் போனில் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்தார். பெண்ணின் கணவர், உறவினர்கள், அந்த எண் யாருடையது என விசாரித்தபோது, அப்பகுதியில் தங்கி ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபரியும் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்த குமார், 50, என்பதை உறுதி செய்தனர். அவர் இதேபோல், பல பெண்களிடம் மொபைல்போனில் ஆபாசமாக பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது உறவினர்கள், அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் குமாரை அவர் தங்கியுள்ள வீட்டிற்கு அருகே பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சம்மந்தப்பட்ட பெண்களிடம், குமார் தனது மொபைல் போனில் பேலன்ஸ் இல்லை; ஒரு போன் செய்து விட்டு தருகிறேன் என கூறி, அவர்களது போனை வாங்கி, அப்பெண்களின் மொபைல் போனில் இருந்து, அவரது மொபைல் போனிற்கே போன் செய்து அவர்களின் நம்பர் பெற்று ஆபாசமாக பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குமாரை போலீசார் ஸ்டேஷன் அழைத்து சென்று, எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X