சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
பு.புளியம்பட்டி: கடம்பூர் மலைப்பாதையில், மண் சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ள கடம்பூருக்கு குறுகலான வளைவுகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால், நேற்று காலை கடம்பூர் மலைப்பாதை, இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில்

பு.புளியம்பட்டி: கடம்பூர் மலைப்பாதையில், மண் சரிவு ஏற்பட்டு மரம் வேரோடு முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ள கடம்பூருக்கு குறுகலான வளைவுகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால், நேற்று காலை கடம்பூர் மலைப்பாதை, இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சாலையோரத்தில் இருந்த மரம், வேரோடு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் கடம்பூர் - சத்தியமங்கலம் இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பஸ்களில் சென்ற பள்ளி மாணவிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்துக்கு செல்லமுடியாமல் மலைப்பாதையிலேயே காத்திருந்தனர். இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலையில் ஆம்புலன்ஸ், பஸ்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பூர் போலீசார், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்திய பின், போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X