சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மீது கார் மோதி 15 பேர் காயம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
பெருந்துறை: பெருந்துறை அருகே, வேன் மீது கார் மோதிய விபத்தில், 15 பேர் காயமடைந்தனர்.விஜயமங்கலம், வாய்ப்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி, 57. இவர் மகள் சங்கீதாவிற்கும், ஈரோடு வில்லரம்பட்டியைச் சேர்ந்த கவின் என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மணமகன் கவின் வீடு பார்க்க, பெரியசாமி உறவினர்கள், 16 பேர் ஒரு வேனில் சென்று, மாலை, 5:00 மணியளவில் வேனில் ஊருக்கு திரும்பி

பெருந்துறை: பெருந்துறை அருகே, வேன் மீது கார் மோதிய விபத்தில், 15 பேர் காயமடைந்தனர்.


விஜயமங்கலம், வாய்ப்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி, 57. இவர் மகள் சங்கீதாவிற்கும், ஈரோடு வில்லரம்பட்டியைச் சேர்ந்த கவின் என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மணமகன் கவின் வீடு பார்க்க, பெரியசாமி உறவினர்கள், 16 பேர் ஒரு வேனில் சென்று, மாலை, 5:00 மணியளவில் வேனில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கள்ளியம்புதூரை சேர்ந்த பிரவீன், 26, வேனை ஓட்டினார். பெருந்துறை நான்கு வழி சாலையில், பெத்தாம்பாளையம் பிரிவு அருகே வரும்போது, எதிர் திசையில் பக்கவாட்டு ரோட்டில், கேரளாவில் இருந்து பெங்களூரு சென்ற கார், குறுக்கே வந்த டி.வி.எஸ். மொபட் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுனர் முயன்றார். அப்போது கட்டுபாட்டை மீறி, சாலையிலுள்ள சென்டர் மீடியனை உடைத்து, எதிர் திசையில் வந்த திருமண கோஷ்டி வேன் மீது மோதியது. இதில் காரில் வந்த கேரளா, திருச்சூரை சேர்ந்த நவீத், 34, அவர் மனைவி நிஸானா, 28, வேன் ஓட்டுனர் பிரவீன், 26, வேனில் வந்த பெரியசாமி, 57, இவர் மனைவி கண்ணம்மாள், 51, கோபி புதுபாளையம் சுப்பையன், 56, வாய்ப்பாடி சுள்ளிமேடு வெங்கடாசலம் மனைவி பூங்கொடி, 49, சரஸ்வதி, 57, தேவி, 40, உமாமகேஸ்வரி, 30, விஸ்வநாதன் மனைவி பூங்கொடி, 47, சென்னிமலை, பிடாரியூர் கவின், 21, செல்லம்மாள், 51, ஒரத்துப்பாளையம் ராசு, 52, இவர் மகன் பிரசாத், 12, ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X