சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

தங்கம் இழைத்த பருத்தி துணி வைத்தியம்!

Added : நவ 18, 2021
Share
Advertisement
மனித தசைகளில் மின் இயக்கத்தை அளக்க கம்பி முனை தோல் மீது அழுத்துவர். இது அசையாமல் படுத்திருக்கும் நோயாளிகள் முதல், வேகமான விளையாட்டு வீரர்கள் வரை எல்லாருக்கும் அசவுகரியத்தைத் தரக்கூடியவை. எனவே தான், அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர்.சாதாரண பருத்தி துணி மீது, வெள்ளி மற்றும் தங்கம் கலந்த படலத்தை இழைத்தனர், யூட்டா

மனித தசைகளில் மின் இயக்கத்தை அளக்க கம்பி முனை தோல் மீது அழுத்துவர். இது அசையாமல் படுத்திருக்கும் நோயாளிகள் முதல், வேகமான விளையாட்டு வீரர்கள் வரை எல்லாருக்கும் அசவுகரியத்தைத் தரக்கூடியவை. எனவே தான், அமெரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர்.

சாதாரண பருத்தி துணி மீது, வெள்ளி மற்றும் தங்கம் கலந்த படலத்தை இழைத்தனர், யூட்டா விஞ்ஞானிகள்.வெள்ளி நேரடியாக தோலில் பட்டால் நச்சு. எனவே தான் தங்கத்தையும் அவர்கள் கலந்தனர். இதனால், பருத்தி இழைகளுக்கு, மனித தசைகள் வெளிப்படுத்தும் மிக மெல்லிய மின் துடிப்புகளை உணரும் திறன் கிடைத்தது.

இதை அணிந்து ஒருவர் பலவேறு செயல்களில் ஈடுபடும்போது, தசைகளின் இறுக்கம், செயல்பாடு ஆகியவற்றை பொறுத்து, மின் வெளிப்பாடு மாறுவதை, இத்துணி துல்லியமாக பதிவு செய்தது. இது சந்தைக்கு வந்தால், பல நோயாளிகளும், விளையாட்டு வீரர்களும் பயன்பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X