இன்று 9வது தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 9வது தடுப்பூசி முகாம்

Added : நவ 18, 2021
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில், 1,392 மையங்களில், ஒன்பதாவது மெகா தடுப்பூசி முகாம், இன்று நடக்கிறது. அப்பணியில் ஈடுபடும், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டோர், தகுதி உடையவர்களை, முகாமுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவாக்ஸின், கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி முகாமில் செலுத்திக்கொள்ளலாம். இதில், 1.35 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது

சேலம்: சேலம் மாவட்டத்தில், 1,392 மையங்களில், ஒன்பதாவது மெகா தடுப்பூசி முகாம், இன்று நடக்கிறது. அப்பணியில் ஈடுபடும், 18 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்டோர், தகுதி உடையவர்களை, முகாமுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவாக்ஸின், கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி முகாமில் செலுத்திக்கொள்ளலாம். இதில், 1.35 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியோர், தவறாமல் செலுத்திக்கொள்ள, கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், இன்று சேலம் மாநகராட்சியில், 205 மையங்களில், 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X