பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து வரிகளையும் ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர் கோரிக்கை

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின், 59ம் ஆண்டு நிறைவு விழா, அதன் சங்க கட்டடத்தில், தலைவர் சியாமளநாதன் தலைமையில் நடந்தது. அதில், கொரோனாவால் அனைத்து தரப்பினரும் பொருளாதார இழப்பை சந்தித்ததால், 2021 - 22ல், தொழில், சொத்து, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்தல்; வங்கிகள் வழங்கும் கடனுக்கு வட்டி, 6 சதவீதத்துக்கு மிகாமல் நிர்ணயித்தல்;

சேலம்: சேலம் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின், 59ம் ஆண்டு நிறைவு விழா, அதன் சங்க கட்டடத்தில், தலைவர் சியாமளநாதன் தலைமையில் நடந்தது. அதில், கொரோனாவால் அனைத்து தரப்பினரும் பொருளாதார இழப்பை சந்தித்ததால், 2021 - 22ல், தொழில், சொத்து, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்தல்; வங்கிகள் வழங்கும் கடனுக்கு வட்டி, 6 சதவீதத்துக்கு மிகாமல் நிர்ணயித்தல்; ஜனவரி முதல் அக்டோபர் வரை, கடன் மீதான வட்டியை தள்ளுபடி செய்தல்; ஜி.எஸ்.டி., தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தல் வேண்டும். பதிவு பெற்ற சின்னம், அரிசிக்கு விதித்துள்ள, 5 சதவீத வரியை ரத்து செய்தல்; பல்வேறு வரிகளை அரசுக்கு செலுத்தும் நிலையில் புதிதாக மாநகராட்சி குப்பை வரி என, சொத்து வரியில், 40 சதவீதம் வரை விதித்துள்ளதை திரும்ப பெறுதல்; சேலம் லாரி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றித்தருதல்; மூத்த அரிசி வணிகர்களுக்கு வரிமான வரி விலக்கு அளித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X