பொது செய்தி

தமிழ்நாடு

கெங்கவல்லியில் 83.6 மழை பதிவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் கெங்கவல்லியில், 83.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மேட்டூர், 59.4, காடையாம்பட்டி, 37, ஆத்தூர், 36.4, ஏற்காடு, 31.4, வீரகனூர், 26, ஓமலூர், 17.1, ஆணைமடுவு, 17, பெத்தநாயக்கன்பாளையம், 15, தம்மம்பட்டி, 10, கரியகோவில், 9, சேலம், 4.4, இடைப்பாடி, 4, சங்ககிரியில், 2 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை, சேலத்தில், 354.9 மி.மீ., மழை பெய்துள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் கெங்கவல்லியில், 83.6 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மேட்டூர், 59.4, காடையாம்பட்டி, 37, ஆத்தூர், 36.4, ஏற்காடு, 31.4, வீரகனூர், 26, ஓமலூர், 17.1, ஆணைமடுவு, 17, பெத்தநாயக்கன்பாளையம், 15, தம்மம்பட்டி, 10, கரியகோவில், 9, சேலம், 4.4, இடைப்பாடி, 4, சங்ககிரியில், 2 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை, சேலத்தில், 354.9 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான மழையளவு, 258.6 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 37 சதவீத மழை கூடுதலாக பெய்துள்ளது. மேட்டூர் மலை சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. அந்த மரத்தை வெட்டி அகற்ற, நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்காததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.


வீடு இடிந்து பெண் காயம்: வாழப்பாடி, புதுப்பாளையத்தில் மாணிக்கம், 55, என்பவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்தது. இதில் மாணிக்கம் மனைவி சுமதி 50, படுகாயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த, பீரோ உள்பட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன. கெங்கவல்லி விவசாயி ஜெயராமன், 40. வீட்டில் தண்ணீர் தேங்கியதால் அவர் உள்பட குடும்பத்தினரை வருவாய்த்துறையினர் மீட்டு, உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.

மின்னல் தாக்கியது: கடம்பூரை சேர்ந்த ராஜ்கண்ணு வீடு மீது மின்னல் தாக்கியது. சுவரில் விரிசல் ஏற்பட்டு மின் சாதனங்கள் சேதமடைந்தன. 74.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தேன்மொழி, கெங்கவல்லி வடக்கு, வீரகனூர் சாலையை சேர்ந்த நித்யா, ரேவதி வீடுகளின் ஒருபுற சுவர் இடிந்தது.

20 வீடுகளில் புகுந்த மழைநீர்: ஆத்தூர் அம்பேத்கர் நகரில், 20க்கும் மேற்பட்ட தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. மழை நின்ற பின், இரவு, 8:00 மணிக்கு மேல் தண்ணீரை மக்கள் வெளியேற்றினர். மழைநீர் தேங்காதபடி, வடிகால் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X