சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

செயற்கைக்கோளை வீசி எறியலாமா?

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஏராளமான செலவு பிடிக்கும் எரிபொருள்; வெடிக்கும் ஆபத்துள்ள தீப் பிளம்பு; ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடிகிற வாகனம்; இதுதான் ராக்கெட்.எனவே, விஞ்ஞானிகளில் ஒரு சாரார், ராக்கெட் இல்லாமலேயே செயற்கைக்கோள்களை வான் கடந்து விண்வெளியில் ஏவ முடியாதா என ஆராய்ந்து வருகின்றனர். அதில் ஒன்றுதான், செயற்கைக்கோள்களை வேகமாக சுழற்றி வீசி எறிதல்!நம்ப முடியவில்லையா? 'ஸ்பின் லாஞ்ச்' என்ற
செயற்கைக்கோளை வீசி எறியலாமா?

ஏராளமான செலவு பிடிக்கும் எரிபொருள்; வெடிக்கும் ஆபத்துள்ள தீப் பிளம்பு; ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடிகிற வாகனம்; இதுதான் ராக்கெட்.எனவே, விஞ்ஞானிகளில் ஒரு சாரார், ராக்கெட் இல்லாமலேயே செயற்கைக்கோள்களை வான் கடந்து விண்வெளியில் ஏவ முடியாதா என ஆராய்ந்து வருகின்றனர். அதில் ஒன்றுதான், செயற்கைக்கோள்களை வேகமாக சுழற்றி வீசி எறிதல்!

நம்ப முடியவில்லையா? 'ஸ்பின் லாஞ்ச்' என்ற அமெரிக்க நிறுவனம், அண்மையில் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிகோவில், ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா என்ற ஏவு தளத்தில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. ஒரு சோதனை ஏவு வாகனத்தை, கம்பியால் கட்டி, 300 அடி உயரமுள்ள வட்டவடிவ கருவிக்குள் வைத்து, மணிக்கு 8 ஆயிரம் கி.மீ., வேகத்தில் சுழற்றினர். உச்சபட்ச வேகத்தை எட்டியதும், சோதனை வாகனத்தை ஒரு குழாய் வழியே வானில் ஏவினர். அந்த வாகனம் ஒலியின் வேகத்தைவிட பல மடங்கு வேகத்தில் வானை கடந்து, விண்வெளியை தொட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்த சோதனையின் வெற்றி இது என, ஸ்பின் லாஞ்ச்சின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுழற்றும் கருவிக்கு தேவைப்படும் மின் ஆற்றல், ராக்கெட்டுக்கு தேவைப்படும் எரிபொருள் ஆற்றலைவிட நான்கு மடங்கு அளவில் குறைவு. தவிர வளி மண்டலத்தில் இது துளி கூட காற்று மாசை ஏற்படுத்தாது. இதே போல பெரிய அளவில் சுழற்சிக் கருவியை உருவாக்கி, 200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை, தினமும் வாடிக்கையாக விண்வெளியில் ஏவ முடியும் என, ஸ்பின் லாஞ்ச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒலியின் வேகத்தைவிட பலமடங்கு சுழற்றி வீசப்படும் செயற்கைக்கோள்கள், அத்தனை புவியீர்ப்பு விசையை தாங்க முடியுமா? முடியும் என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இன்று செயற்கைக்கோளுக்கு தேவையான மின்னணு உதிரி பாகங்கள் மிக மிக சிறிய அளவில், நேனோ அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பலமானவையாக, அதிர்வை தாங்குபவையாக தயாரிக்க முடியும். எனவே செயற்கைக்கோள்கள் மற்றும் ஆளில்லா விண்வெளி ஆய்வகங்களை ஸ்பின் லாஞ்ச் முறை மூலம் ஏவ முடியும் என, ஸ்பின் லாஞ்ச் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X