கனமழையால் வேலூரில் ஆட்டோ சேவை நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் வேலூரில் ஆட்டோ சேவை நிறுத்தம்

Added : நவ 18, 2021
Share
வேலுார்: கனமழை காரணமாக சாலையில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வேலுாரில் ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று வேலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலுார் கிரீன் சர்க்கிள், பழைய பஸ் ஸ்டாண்டு, தோட்டப்பாளையம், கொணவட்டம், சேண்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் குளம்
கனமழையால் வேலூரில் ஆட்டோ சேவை நிறுத்தம்

வேலுார்: கனமழை காரணமாக சாலையில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வேலுாரில் ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று வேலுார் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலுார் கிரீன் சர்க்கிள், பழைய பஸ் ஸ்டாண்டு, தோட்டப்பாளையம், கொணவட்டம், சேண்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. கிரின் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
ஏற்கனவே வேலுார் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் சாலைகளில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலுாரில் இன்று காலை முதல் ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வேலுார் ஆட்டோ தொழிலாளர்கள் முன்னேற்ற முன்னணி கழக தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: கனமழையாலும், ஏற்கனவே உள்ள பள்ளங்களினாலும், வேலுாரில் எங்கு சாலை உள்ளது, பள்ளம் உள்ளது என தெரியவில்லை. பள்ளத்தில் இறங்கி ஏறினால் ஆட்டோ பழுதடைந்து அதை சரி செய்ய அதிகம் செலவாகிறது. ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வால் கடுமையாக ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டுள்து.
இது போன்ற காரணத்தினால், தற்காலிகமாக ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்று, தண்ணீர் வடிந்த பிறகு தான் ஆட்டோ சேவை தொடங்கப்படும். அவசர சேவைக்கு மட்டும் மருத்துவமனைகளுக்கு மட்டும் ஆட்டோ இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X