பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பணி முடக்கம்: மண்பாண்ட தொழிலாளருக்கு நிவாரணம் கிடைக்குமா?

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஓமலூர்: தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பணி முடங்கி, மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருவதால், நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், காடையம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டியில், 70 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். அங்கு, 90 சதவீதம் அகல் விளக்கு, மீதி பானை உற்பத்தி பணி நடக்கிறது. நெய் விளக்கு முதல், 5 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தும்படி

ஓமலூர்: தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பணி முடங்கி, மண்பாண்ட தொழிலாளர்கள் தவித்து வருவதால், நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.


சேலம் மாவட்டம், காடையம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டியில், 70 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர். அங்கு, 90 சதவீதம் அகல் விளக்கு, மீதி பானை உற்பத்தி பணி நடக்கிறது. நெய் விளக்கு முதல், 5 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தும்படி அகல்விளக்கு, சிறியது முதல், 5 கிலோ பானை வரை தயாரிக்கப்படுகிறது. விளக்குகள், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கோவை வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் தொடர் மழையால், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு, 'ஆர்டர்' கொடுத்த விளக்குகளை, வெயிலில் காய வைக்க முடியாமல், உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தினமும் லட்சம் விளக்குகள் உற்பத்தி செய்த நிலையில், தற்போது, 5,000க்கும் குறைவாகவே தயாரிக்கப்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து, கஞ்சநாயக்கன்பட்டி மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தலைவர் ராமச்சந்திரன் கூறியதாவது: விநாயகர் சதுர்த்திக்கு பின் மழையால் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் தண்ணீர் தேக்கத்தால் களிமண் எடுக்க முடியாது. மழையால் வைக்கோல், தட்டு உள்ளிட்ட எரிக்க கூடிய பொருட்கள் நனைந்து கிடப்பது, விளக்குகளை சுட வைக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால், இரு வாரமாக அகல்விளக்கு, பானை உற்பத்தி பணி நிறுத்தப்பட்டுள்ளது. வெயில் இல்லாததால், காயாத விளக்குகளை தீயில் சுட்டால் விளக்கு கருத்தும், வெடித்தும் விடும். இதனால் அதிகளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால் உற்பத்தி செய்ய முடியவில்லை. சீசன் நேரத்தில் இயற்கை தாக்கத்தால் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை(1,000 விளக்கு), 500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 700 ரூபாய் என்றாலும், உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு, மழைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்குவதாக அரசு அறிவித்ததோடு சரி. தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, நல வாரியம் மூலம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X