பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை: நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தகவல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ''ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளை இணைத்து, ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும்,'' என, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு கூறினார்.ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அலுவலர்களுடன்

ஆத்தூர்: ''ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளை இணைத்து, ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும்,'' என, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு கூறினார்.


ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று, தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது: தலைவாசல் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும்படி, ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 72 இடங்களில் புதிதாக மின் மயானம் அமைக்க, தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் மின் மயானம் அமைப்பது தொடர்பாக, மாவட்ட கலெக்டர் மூலம் அறிக்கை பெறப்படவுள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மின்விளக்கு, கழிப்பிடம் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பேரிடர் நிவாரண நிதியாக, முதல் கட்டமாக, 300 கோடி ரூபாயை அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இரண்டாவது கட்டமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு அனைத்து துறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. திட்டப்பணிகளில் தாமதம், மந்தமாக உள்ளதை கண்டறிந்து பணிகள் விரைந்து முடித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆத்தூர் நகராட்சி பழமையான நகராட்சியாக உள்ளது. ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சியை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த, அடுத்த ஆண்டில் பரிசீலனை செய்யப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஆறு புதிய மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தம்மம்பட்டி பேரூராட்சியை, அடுத்த கூட்டத் தொடரில் நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். ஊராட்சியில் 10 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் பேரூராட்சியாகவும்; 25 ஆயிரம் பேருக்கு மேல் உள்ள பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X