ஆடைக்கு மேல் தொட்டாலும் பாலியல் சீண்டல் தான்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: 'தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும், அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும்,' எனக்கூறி சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.கடந்த 2016ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது
POCSO Act, Skin To Skin Contact, Supreme Court, Children, SC, போக்சோ, ஆடைக்கு மேல் தொடுதல், பாலியல் சீண்டல், மும்பை ஐகோர்ட், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும், அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும்,' எனக்கூறி சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2016ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறல் தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜன.,19 அன்று, ஒரு தீர்ப்பு அளித்தது. அதில், 'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி, அந்த நபரை விடுதலை செய்தது.


latest tamil news


இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கொண்டு சென்றார். உயர்நீதிமன்ற கிளையில் இந்த தீர்ப்பானது, இடையூறு ஏற்படுத்துவதாகவும், ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், உயர்நீதிமன்ற கிளையானது, பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது எனக்கூறி குற்றவாளி விடுவிக்கப்பட்டதை எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.


latest tamil news


இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், உயரநீதிமன்ற கிளையின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்தனர்.

இந்நிலையில், 'தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும்; அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான், போக்சோ சட்டத்துக்குள்தான் வரும்,' எனக்கூறி சிறுமிகளை ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ போட முடியாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
18-நவ-202123:25:47 IST Report Abuse
spr இதனைப் பாராட்டுவோம் ஆனால் கொஞ்சம் சிந்திப்போம் ஓரினச் சேர்க்கை உள்ளவரென வெளிப்படையாக அறியப்பட்ட நீதிபதி உயர் பதவி பெறுகிறார் திருமணம் என்ற புனிதமான ஒப்பந்தம் செய்த பின்னும் பிறர் மனைவியுடன்/கணவருடன் உறவு கொள்வது குற்றமல்ல என்றெல்லாம் "வரலாற்று சிறப்பு" வாய்ந்த தீர்ப்புக்களை அறிவித்த நம் நீதிபதிகள் இன்னமும் புகை பிடிப்பதனையும் குடிப்பதனையும் குற்றமென்றே சொல்கிறார்கள் வியப்பாக இல்லையா ? இந்தியா போன்ற படிப்பறிவில்லாத மக்கள் தொகை அதிகமுள்ள அதீத சுதந்திரமுள்ள நாட்டில் இது போன்ற தவறுகள் நடக்கலாம் . சமுதாய ஊடகங்கள் விளம்பரம் தராதவரை அவை குறைவாகவே இருக்கும் அதற்கு தண்டனை அளித்தால் அது குறையும் ஆனால் அதை விடுத்து சட்டப்படி சரியென்றால் சமுதாய நலம் கெடும் அண்மைக்காலத்தில் பதவியில் இருக்கும் நீதிபதிகள் சட்டம் அறிந்தவர்கள்தாம் ஆனால் சமுதாயத்தின் நெடுநாள் நலம் அறிந்தவர்கள் அல்ல பொதுவாக இந்திய பண்பாடு கலாசாரத்திற்கெதிராக தீர்ப்பு தருவதுதான் நம் நாட்டு நீதிமன்றங்களின் செயல்பாடு. அப்படியிருக்க இந்த வழக்கில் அதிசயமாக உயர்நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்ததன் பின்னணி என்ன? எனினும் பாராட்டுவோம்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-நவ-202121:47:04 IST Report Abuse
Kasimani Baskaran ஒரு பயலாவது பெற்றோர் ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்று சொல்லவேயில்லை.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-நவ-202120:15:17 IST Report Abuse
vbs manian உச்ச நீதி மன்றம் கண்ணியத்தை கா ப்பாற்றியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X