அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தாமரை மலருமா ? கோவை ஔிருமா ? ' தயாராகுது பா.ஜ.,

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
கொங்கு மண்டலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், கோவை அல்லது திருப்பூர் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் தொடர் போராட்டங்களை நடத்தும் புது வியூகத்தை அம்மண்டல பா.ஜ., பொறுப்புக்குழு அமைத்துள்ளது.சட்டசபை தேர்தலில், தி.மு.க., வுக்கு கொங்கு மண்டலத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.அதை சரிக்கட்டும் வகையில் கொங்கு மண்டலத்தின்

கொங்கு மண்டலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், கோவை அல்லது திருப்பூர் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டும் தொடர் போராட்டங்களை நடத்தும் புது வியூகத்தை அம்மண்டல பா.ஜ., பொறுப்புக்குழு அமைத்துள்ளது.latest tamil news


சட்டசபை தேர்தலில், தி.மு.க., வுக்கு கொங்கு மண்டலத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.அதை சரிக்கட்டும் வகையில் கொங்கு மண்டலத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் இடங்களை கைப்பற்றும் பொறுப்பு அம்மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க., வை பின்னடைவு செய்தது போல் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பின்னடைவு ஏற்படுத்துவார் என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது. அதேபோல் அ.தி.மு.க., சார்பில் கொங்குமண்டலத்தை மீண்டும் அ.தி.மு.க., கோட்டையாக தக்க வைக்கும் முயற்சியல் மாஜி அ.தி.மு.க., அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் தீவிரமாக உள்ளனர்.

அதேபோல் தேசியக்கட்சியான பா.ஜ., வும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளையும், மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்ற மண்டலவாரியாக பொறுப்பாளர்கள் குழுக்களை நியமித்துள்ளது. கொங்கு மண்டலத்தில் உள்ள வருவாய் மாவட்டங்கள் மற்றும் கட்சி அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 12 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளா்.


latest tamil newsஇவர் கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும், மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தாபானர்ஜிக்கும் எதிராக பா.ஜ., போராட்டக்குழுவின் தலைவராக பணியாற்றிய அனுபவம் உண்டு. அதனால், அமைச்சர் செந்தில்பாலாஜி ஈடுகொடுத்து தேர்தல் பணிகளில் ஈடுப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் எழுந்து்ளது.

கோவையில் பா.ஜ., கட்சியின் சார்பில் கூட்டணி குறித்த பேச்சு, இடபங்கீடு பேச்சு துவக்குவதற்கு முன், 'வெற்றிசின்னம் தாமரை' என சுவர்விளம்பரம் செய்யும் பணி ஜரூராக துவக்கப்பட்டுள்ளது. 'வெற்றிவேல், வீரவேல்'என்ற வாசகத்துடன் வேல் தாமரை மலர் தண்டு போலவும், அதன் இருபுறமும் இதழ்கள் விரித்த வண்ணம் வரைந்த சுவர் விளம்பரங்கள் ஆளுங்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 'தாமரை மலரட்டும் கோவை ஔிரட்டும்' என்ற கோஷத்துடன் மாநகராட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ., தயாராகி வருகிறது.
மேலும், ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, வார்டு வாரியாக தொடர் போராட்டங்களை நடத்தி, மக்கள் சக்தியை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இப்படி, தேர்தலில் வெற்றி பெறும் புதுப்புது வியூகங்களை பா.ஜ., மண்டல பொறுப்புக்குழு அமைத்து வருவது, அக்கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ரோட்டி கப்டா அவுர் மக்கான் ஆமாங்க ஆளுக்கொரு ஹாப் பிரெட் ஒரு காசித்துண்டு மக்கான்? அதான் சோளக்கதிர் கொடுத்திடுவாங்க
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சுவர்விளம்பரம் செய்யும் பணி ஜரூராக துவக்கப்பட்டுள்ளது?. இதற்கு அனுமதி இல்லையே அழிப்பதற்கு செலவு தொகையை வசூலிக்கவும்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-நவ-202119:22:30 IST Report Abuse
sankaseshan அண்ணாமலை one man army. யாக. செயல் படுகிறார். வாழ்த்துக்கள்.
Rate this:
Suri - Chennai,இந்தியா
18-நவ-202120:06:06 IST Report Abuse
SuriOne man comedian. Photo shoot fame...
Rate this:
18-நவ-202120:29:09 IST Report Abuse
பாமரன்சங்கு... யூ மீன் ஒத்த ஓட்டு மேன் அப்பிடின்னு சொல்ல வர்றேளா...🙄🙄 அப்போ சரி தான்..🤭🤭...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X