பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: திருவள்ளூரில் தொடர் மழை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்ள, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றனர்.தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி
திருவள்ளூர் விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர்

ராணிப்பேட்டை: திருவள்ளூரில் தொடர் மழை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்ள, அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே தக்கோலத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து 20 பேர் கொண்ட குழுவினர் திருவள்ளுருக்கு விரைந்துள்ளனர். மீட்பு கருவிகள், உயிர் காக்கும் பொருட்கள், ரப்பர் படகுகளுடன் டிரக்கில் திருவள்ளுருக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X