பொது செய்தி

தமிழ்நாடு

வேலூரில் வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் பாறைகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் பகுதியில் மலையோரம் உள்ள வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் பாறைகள் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், காகிதப்பட்டரை பகுதியில் உள்ள மலையிலும், மலையடிவாரத்திலும் 300க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 14 ம் தேதி மலையிலிருந்து 100 டன்
வேலூரில் வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் பாறைகள்

வேலுார்: வேலுார் பகுதியில் மலையோரம் உள்ள வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் பாறைகள் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், காகிதப்பட்டரை பகுதியில் உள்ள மலையிலும், மலையடிவாரத்திலும் 300க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 14 ம் தேதி மலையிலிருந்து 100 டன் எடையுள்ள பாறை உருண்டு ஒரு வீட்டில் மீது விழுந்ததில், ரமணி, நிஷா ஆகியோர் இறந்தனர்.

மேலும் பல பாறைகள் சரிந்த விழும் நிலையில் இருப்பதாகவும், இங்கு வசிப்பவர்களை வெளியேற்றும்படி மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேலுார் வருவாய்த்துறையினர் கணக்கெடுத்ததில், 40 பாறைகள் விழும் நிலையில் உள்ளது தெரியவந்தது. இது குறித்து வேலுார் வருவாய்த்துறையினர் கூறியதாவது: காகிதப்பட்டரை மலையில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். அரசு இலவசமாக வீடு கட்டிக் கொடுத்தால்தான் காலி செய்ய முடியும் என்கின்றனர்.

இங்கு வீடு கட்டி வசிப்பவர்களுக்கு, வேறு இடத்தில் வீடோ, வீட்டு மனையோ உள்ளதா? என கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. வீடோ, வீட்டு மனையோ இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X