ரூ.5 லட்சம் கோடி வங்கிக்கடனை மீட்டுள்ளோம்: பிரதமர் மோடி பெருமிதம்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (79) | |
Advertisement
புதுடில்லி: கடந்த 7 ஆண்டுகளில் வங்கித்துறையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் வங்கிகளின் நிதிநிலை தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் ஒரு புதிய பாய்ச்சலுக்கான புதிய தீர்மானத்தை எடுக்கும் ஒரு
PMModi, Banks, Financial Health, Better Position, பிரதமர் மோடி, வங்கிகள், நிதிநிலை, மேம்பட்டு இருக்கிறது, கருத்தரங்கு

புதுடில்லி: கடந்த 7 ஆண்டுகளில் வங்கித்துறையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் வங்கிகளின் நிதிநிலை தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திலும் ஒரு புதிய பாய்ச்சலுக்கான புதிய தீர்மானத்தை எடுக்கும் ஒரு நேரம் வரும். அதன்பின் அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஒட்டுமொத்த தேசத்தின் பலமும் ஒன்று சேரும். அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும் சூழலில் தான் இப்போது இருக்கிறோம்; இனி துவங்க வேண்டியதுதான். கடந்த 6 முதல் 7 ஆண்டுகளில் வங்கித் துறையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் இந்தத் துறைக்கு எல்லா வகையிலும் அளிக்கப்பட்ட ஆதரவு ஆகியவை நாட்டில் வங்கித்துறை மிகவும் வலுவான நிலையில் இருக்க வழிவகுத்துள்ளது.


latest tamil news


வங்கிகளின் நிதிநிலை தற்போது மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் இருந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழிகளைக் கண்டோம். சட்டங்களைச் சீர்திருத்தினோம், கடன் மீட்பு தீர்ப்பாயத்தை வலுப்படுத்தினோம். வங்கிக் கடனைப் பெற்றுக் கொண்டு ஒருவர் தப்பிச் சென்றால், அது நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு துணிச்சலான அரசாங்கம் அவர்களை மீட்டு கொண்டு வரும்போது, ​​யாரும் அதைப் பற்றி விவாதிப்பதில்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட கடனில் தற்போது வரை 5 லட்சம் கோடி ரூபாய் மீட்டுள்ளோம்.


latest tamil news


நமது வங்கித்துறையின் பலம் சர்வதேச அளவில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். குடிமக்களின் உற்பத்தி திறனை வெளிக்கொண்டுவரவேண்டும். ஜன்தன் யோஜனா திட்டம் ஏழைகளுக்கு மிகவும் உதவியது. இன்னும் பல ஜன்தன் வங்கி கணக்குகளை துவக்க வேண்டும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும். அவர்கள் முதலீடு செய்வதற்கு இதுவே சிறந்த நேரம். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai - Paris,பிரான்ஸ்
18-நவ-202121:57:52 IST Report Abuse
Sai BANKS HAVE WRITTEN OFF BAD LOANS WORTH RS 10.8 LAKH CRORE IN LAST EIGHT YEARS - NEWS LAUNDRY
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
18-நவ-202121:42:01 IST Report Abuse
K.n. Dhasarathan அனைத்து பணமும் ஏழைகளிடம் சுரண்டியது, குறைந்த பட்ச இருப்பு பணம் என்று சுரண்டியது, அனைத்து வாங்கி கட்டணங்களையும் வட்டி உள்பட உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்தது, பிறகு வாங்கி இருப்பு உயராமல் என்ன செய்யும் ? நீங்கள் என்ன சாதனை மற்றவர்கள் பண்ணாதது பண்ணுனீர்கள் என்று சொன்னால் நல்லது .
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
18-நவ-202121:19:08 IST Report Abuse
Tamilnesan இப்ப தெரியுதா, தமிழ்நாட்டில் ஏன் பிரதமரை ஆதரிக்கவில்லை என்று. திருடனுக்கு போலீஸ்காரரை என்றுமே பிடிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X