பொது செய்தி

தமிழ்நாடு

'மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு'

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், கெங்கவல்லியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பேசுகையில், ''சேலம் மக்களிடம் குறை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்தில் மனுக்கள் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். முதியோர் உள்ளிட்ட உதவித்தொகை திட்டங்கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,''

ஆத்தூர்: ஆத்தூர், கெங்கவல்லியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் முகாமில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பேசுகையில், ''சேலம் மக்களிடம் குறை கேட்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாதத்தில் மனுக்கள் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். முதியோர் உள்ளிட்ட உதவித்தொகை திட்டங்கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். எம்.பி.,க்களான, கள்ளக்குறிச்சி கவுதமசிகாமணி, சேலம் பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்னதுரை, சேலம் கலெக்டர் கார்மேகம் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நாகியம்பட்டி இலங்கை தமிழர் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கி, அமைச்சர் நேரு பேசியதாவது: பட்டா வழங்கும்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நீர்நிலை புறம்போக்கு, குளம், வரத்து வாய்க்கால் பகுதிகளை தவிர்த்து சட்ட விதிக்குட்பட்டு வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களில் புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்கள் கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தாண்டில் அதிகளவில் மழை பெய்துள்ளதால் குடிநீர் பற்றாக்குறை இருக்காது. பற்றாக்குறை உள்ள இடங்களில் பாதுகாப்பான குடிநீர் வழங்க புது திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்படும். முன்னோடி வங்கி மூலம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான கடனுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

2,485 மனுக்கள்: சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில், அமைச்சர் நேருவிடம் 2,485 பேர் மனு வழங்கினர். முன்னதாக, ஆட்டையாம்பட்டியை சேர்ந்த சாந்தி, 55, என்பவருக்கு, வெள்ளத்தில் மகனை பறிகொடுத்த சம்பவத்தில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் காசோலை, வழங்கினர். தொடர்ந்து, உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது. வரும், 26ல், சேலம் சோனா கல்லூரியில் நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில், 1,295 மனுக்கள் பெற்றார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X