சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வியாபாரியிடம் ஆன்லைன் மூலம் ரூ.57,323 மோசடி; மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், வியாபாரியிடம் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாக கூறி, 57 ஆயிரத்து, 323 ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து, சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், அல்லிக்குட்டை, கே.ஏ.வி., நகரை சேர்ந்த செல்வம் மகன் மோகன்ராஜ்,33. ஜவுளி வியாபாரி இவரின் மொபைல் எண்ணில், கடந்த, நவ.,15 மதியம், 12:08 மணிக்கு பேசிய மர்ம நபர், தன்னை

சேலம்: சேலம், வியாபாரியிடம் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாக கூறி, 57 ஆயிரத்து, 323 ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து, சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், அல்லிக்குட்டை, கே.ஏ.வி., நகரை சேர்ந்த செல்வம் மகன் மோகன்ராஜ்,33. ஜவுளி வியாபாரி இவரின் மொபைல் எண்ணில், கடந்த, நவ.,15 மதியம், 12:08 மணிக்கு பேசிய மர்ம நபர், தன்னை பேங்க் ஆப் பரோடாவின் கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்துள்ளார். தங்களின் வங்கி பரிவர்த்தனையின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள சிபில் மதிப்பெண் அடிப்படையில், கிரெடிட் கார்டு, கடன் வழங்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான விண்ணப்பம், தங்களுக்கு அனுப்பி உள்ளேன். அதற்கு, 10 ரூபாய் வங்கி வழியாக பரிமாற்றம் செய்யும் படி தெரிவித்துள்ளார். அதனை நம்பி மோகன்ராஜ், 10 ரூபாயை ஆன்லைன் மூலம் மர்ம நபருக்கு பரிமாற்றம் செய்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மோகன்ராஜியின் வங்கி கணக்கில் இருந்து, 57,323 ரூபாய் அபேஸ் செய்யப்பட்டு விட்டது. இது குறித்து நேற்று முன்தினம் மோகன்ராஜ், மாநகர சைபர் க்ரைம் பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X