சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நிலாவில் கிடைக்கவிருக்கும் தாது வளம்!

Added : நவ 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நிலாவின் தென் துருவத்தில், உறைந்த திட நிலையில் கார்பன் - டை - ஆக்சைடு படிமங்கள் ஆங்காங்கே இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கோள் அறிவியல் நிலையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு இது.அடுத்த 10 ஆண்டுகளில், மீண்டும் நிலாவிற்கு மனிதர்கள் போய் வருவது அதிகரிக்கவிருக்கிறது. எனவே நிலாவிலுள்ள இந்த வளங்கள் மிகவும்
நிலாவில் கிடைக்கவிருக்கும் தாது வளம்!

நிலாவின் தென் துருவத்தில், உறைந்த திட நிலையில் கார்பன் - டை - ஆக்சைடு படிமங்கள் ஆங்காங்கே இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் கோள் அறிவியல் நிலையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு இது.

அடுத்த 10 ஆண்டுகளில், மீண்டும் நிலாவிற்கு மனிதர்கள் போய் வருவது அதிகரிக்கவிருக்கிறது. எனவே நிலாவிலுள்ள இந்த வளங்கள் மிகவும் மனிதர்களுக்கு உறுதுணையாக இருக்கும். எப்படி? நிலாவில் தென் துருவத்தின் இருண்ட பகுதியில், குறைந்தது 204 சதுர கி.மீ., பரப்பளவுக்கு கார்பன் - டை - ஆக்சைடு படிமங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதை மனிதர்கள் நிலாவில் மீண்டும் இறங்கி உறுதி செய்யவுள்ளனர். அப்படி உறுதியானால், அவர்களுக்கு செவ்வாய் செல்லவோ, பூமிக்கு திரும்பவோ தேவையான ராக்கெட் எரிபொருளுக்கு கார்பன் - டை - ஆக்சைடு பயன்படும். மேலும், அங்கேயே இரும்பு மற்றும் இதர உயிரிப் பொருட்களை தயாரிக்க இந்த இயற்கை வளங்கள் மூலப்பொருட்களாகப் பயன்படும். மனிதர்களுக்கு நிலாவில் வீடு கட்டவும் இவை எதிர்காலத்தில் உதவும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202104:20:18 IST Report Abuse
J.V. Iyer சென்னைக்கு மிகஅருகில் என்று நிலவில் பிளாட் போட்டு விற்க தயாராக உள்ளார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X