பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை பிரச்னைகளுக்கு தீர்வு காண கலந்தாய்வு கூட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வனத்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடனான கலந்தாய்வு நேற்று மாலை, 3:00 மணிக்கு நடந்தது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். இதில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள்

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வனத்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடனான கலந்தாய்வு நேற்று மாலை, 3:00 மணிக்கு நடந்தது. கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை வகித்தார். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். இதில், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி(பாப்பிரெட்டிப்பட்டி), சம்பத்குமார்(அரூர்), பா.ம.க., பென்னாகரம் எம்.எல்.ஏ., ஜி.கே.மணி மற்றும் பலர் பேசினர். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், ''வனங்கள் தொடர்பாக சட்டங்கள் உள்ளதுடன், உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்துவது அவசியம். வனத்துறை சட்டத்ததால் எனது சொந்த மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில், 10 ஆயிரத்து, 600 குடும்பங்களுக்கு மின்இணைப்பு வழங்க முடியவில்லை. இதனால், அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. மின்இணைப்பு வழங்க தமிழக அரசு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X