பொது செய்தி

தமிழ்நாடு

பாலக்கோடு - சிவாடி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
தர்மபுரி: இந்திய ரயில்வே நிர்வாகம், வரும், 2030க்குள் பூஜ்ய கார்பன் உமிழும் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைக்கும் துறையாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக நாடு முழுக்க ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு கோட்டத்தில், பெங்களூரு அடுத்த பையனப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சேலம் மாவட்டம்,

தர்மபுரி: இந்திய ரயில்வே நிர்வாகம், வரும், 2030க்குள் பூஜ்ய கார்பன் உமிழும் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைக்கும் துறையாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக நாடு முழுக்க ரயில் பாதைகள் மின் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு கோட்டத்தில், பெங்களூரு அடுத்த பையனப்பள்ளி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, சேலம் மாவட்டம், ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் வரையிலான ரயில் வழிப் பாதை மின் மயமாக்கும் பணி, 227 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கிறது. ஏற்கனவே தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வரை இப்பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சிவாடி ரயில்வே ஸ்டேஷன் வரை மின்மயமாக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பாலக்கோட்டில் இருந்து சிவாடி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. இப்பணியை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார். பல்வேறு முறை நடந்த சோதனை ஓட்டத்துக்கு பின் இறுதியாக, மணிக்கு, 100.6 கி.மீ., வேகத்தில் சோதனை ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X