சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் ஜீப் பாய்ந்து தந்தை, மகள் பலி சம்பவம்: சாலையில் தேங்கிய மழைநீர்; கிரிப் இல்லாத டயரால் விபத்து

Added : நவ 18, 2021
Share
Advertisement
காரிமங்கலம்: சாலையில் தேங்கிய மழைநீர் மற்றும் கிரிப் இல்லாத டயரால், காரிமங்கலத்தில் நடந்த விபத்தில், கிணற்றில் ஜீப் பாய்ந்து, தந்தை, மகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்து பக்கநாடு பகுதியை சேர்ந்தவர் வீரா, 41; இவர், பெங்களூருவிலுள்ள கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டிசைனர் மற்றும் மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி உமாலட்சுமி, 34;

காரிமங்கலம்: சாலையில் தேங்கிய மழைநீர் மற்றும் கிரிப் இல்லாத டயரால், காரிமங்கலத்தில் நடந்த விபத்தில், கிணற்றில் ஜீப் பாய்ந்து, தந்தை, மகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.


சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்து பக்கநாடு பகுதியை சேர்ந்தவர் வீரா, 41; இவர், பெங்களூருவிலுள்ள கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் டிசைனர் மற்றும் மேலாளராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி உமாலட்சுமி, 34; பெங்களூருவில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களது மகள் சுஷ்மிதா, 13; பெங்களூருவில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு தன் சொந்த ஊருக்கு சென்ற வீரா, செவ்வாய்க்கிழமை பெங்களூரு புறப்பட்டார்.

தேங்கிய நீரால் ஆபத்து: வீராவின் கார் பழுதானதால், உமாலட்சுமியின் அண்ணன் பாபுவின் போலிரோ ஜீப்பில் புறப்பட்டனர். மதியம், 2:45 மணிக்கு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொன்னேரி வழியாக சென்றனர். அங்கு பெய்த மழைக்கு சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது. வீரா சென்ற ஜீப்புக்கு முன்னால் ஒரு கார் சென்றது. அக்கார் ரோட்டில் ?தேங்கியிருந்த நீரில் இறங்கியபோது, வீராவின் ஜீப் கண்ணாடியில் மழைநீர் தெறித்தது. அப்போது ஜீப்பின் முன் எதுவும் தெரியாததால் வீரா பிரேக்கை மிதித்துள்ளார். அப்போது, ஜீப்பின் பின்பக்க டயர்கள் வழுவழுப்பாக இருந்ததால் பிரேக் பிடிக்காமல், மழை ஈரத்துக்கு சாலையின் வலதுபுறமாக திருப்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தேசிய நெடுஞ்சாலை அருகே, 60 அடி தூரத்திலிருந்த, 65 அடி ஆழ விவசாய கிணற்றில் தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. இதில் ஜீப்பின் ஒரு பக்க கதவு திறந்ததால், உமாலட்சுமி அதிலிருந்து தள்ளப்பட்டு கிணற்று நீரில் விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்கள் இதை பார்த்து உமாலட்சுமியை உயிருடன் மீட்டனர்.

புது அனுபவம்: வீரா, தன் ஸ்விப்ட் டிசையர் கார் ஓட்டிய பழக்கப்பட்டவர். திடீரென போலிரோ ஜீப் ஓட்டியது அவருக்கு புதுமை. ஜீப் கட்டுப்பாட்டை இழந்து நேராக கிணற்றில் இறங்கியபோது, வீரா தன் மனைவியிடம், 'அவ்வளவுதான் முடிஞ்சிடுச்சி உமா' என கூறி உள்ளார். பிறகு, காருடன் கிணற்றில் விழுந்தபோது பின் சீட்டில் அமர்ந்திருந்த தன் மகளை, வீரா காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அதற்குள் மூச்சு திணறி இருவரும் இறந்துள்ளனர். வகுப்பில் முதல்மாணவியாகவும், பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்து படுசுட்டியாக இருந்து வரும் மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற தந்தையும், மகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உயர தடுப்பு இல்லை: விபத்து நடந்த இடம், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, 60 அடி தூரத்திலும், தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்திலிருந்து, 12 அடி தூரத்திலும் கிணறு உள்ளது. விவசாய கிணறு பெயரளவுக்கு தடுப்புவேலி அமைத்துள்ளனர். இந்த கிணற்றில், தடுப்பு சிமென்ட் மூலம் உயரமாக கட்டியிருந்தால், விபத்தில் உயிரிழப்பு இருந்திருக்காது. அதேபோல் விபத்து நடந்த பகுதி, சற்று வளைவான பகுதி, மழைநீர் செல்லாமல் ரோட்டில் தேங்கி நின்றுள்ளது. அங்கு தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மளிகைக்கடைகளில் லாரி ஓட்டுனர்கள் லாரியை நிறுத்தி மளிகை பொருட்கள் வாங்குவதால், ரோட்டின் ஓரம் குண்டும் குழியுமாக மாறி, தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.

வாகன ஓட்டிகள் கோரிக்கை: தேசிய நெடுஞ்சாலை யோரத்தில் ஜீப் விழுந்த கிணற்றில், போலீசார் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். கிணற்று உரிமையாளர் சேதமான தடுப்புவேலிக்கு பதில் கயிறு கட்டி வைத்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். சாலையோர மளிகை கடைகளை அகற்ற வேண்டும். ஜீப் கவிழ்ந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள கிணறுகளில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X