மின்கம்பிகள் திருடிய 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கம்பிகள் திருடிய 3 பேர் கைது

Added : நவ 18, 2021
Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டையிலுள்ள தேவராஜ் என்பவரது நிலத்தில், புதிய இணைப்பு வழங்க, மின்வாரியம் மூலம், 1,000 மீ., மின்கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த, 15ல் இரவு, 50 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை திருடி சென்றனர். அந்தேவனப்பள்ளி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பராமரிப்பு) இருதயராஜ், 42, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துக்கோட்டையிலுள்ள தேவராஜ் என்பவரது நிலத்தில், புதிய இணைப்பு வழங்க, மின்வாரியம் மூலம், 1,000 மீ., மின்கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த, 15ல் இரவு, 50 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகளை திருடி சென்றனர். அந்தேவனப்பள்ளி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பராமரிப்பு) இருதயராஜ், 42, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளத்தை சேர்ந்த சின்னசாமி, 38,டொக்குபோதனஹள்ளியை சேர்ந்த செல்லக்குமார், 26, அரிச்சந்தனூரை சேர்ந்த திருப்பதி, 32, ஆகியோர் மின்கம்பிகளை திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X