பள்ளி செல்ல சனத்குமார் நதியில் இறங்கிஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, ஜக்கேரி பஞ்., உட்பட்ட வாட்டியப்பன் கொட்டாய் கிராமத்தில், 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் கூலித்தொழிலாளர்கள். மருத்துவம், படிப்பு உள்ளிட்ட அவசிய தேவைக்கு கெலமங்கலம் அல்லது தேன்கனிக்கோட்டைக்குத்தான் இப்பகுதி மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இக்கிராமத்திற்கு செல்ல சனத்குமார் நதிக்கரையோரம் மண்ணை கொட்டி சாலை அமைத்து

ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, ஜக்கேரி பஞ்., உட்பட்ட வாட்டியப்பன் கொட்டாய் கிராமத்தில், 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அனைவரும் கூலித்தொழிலாளர்கள். மருத்துவம், படிப்பு உள்ளிட்ட அவசிய தேவைக்கு கெலமங்கலம் அல்லது தேன்கனிக்கோட்டைக்குத்தான் இப்பகுதி மக்கள் செல்ல வேண்டியுள்ளது. இக்கிராமத்திற்கு செல்ல சனத்குமார் நதிக்கரையோரம் மண்ணை கொட்டி சாலை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக தான் மக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால், சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மண் சாலை நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மக்கள் சென்று வர முடியாமல், சனத்குமார் நதியில் செல்லும் தண்ணீரில் இறங்கி, ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் தண்ணீரில் இறங்கி, சின்னட்டி, கெலமங்கலத்திலுள்ள அரசு பள்ளிக்கு செல்கின்றனர். மண் சாலை அடித்து செல்லப்பட்டுள்ளதால், இக்கிராமம் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் ஒரு தரைமட்ட பாலம் அமைத்து தர, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X